Monday, February 27, 2017

பதமே சதம்!



கீதாம்மா தன் இனிய குரலில்...மிக்க நன்றி கீதாம்மா!

பதமொன்றே கதியென்று நம்பி வந்தேன், உன்
பதமொன்றே சதமென்று கண்டு கொண்டேன்
(அம்மா)

சித்திரப் பூப்போலே திருப்பாதம், அதை
வைத்திடென் சென்னியின் மேல் அது போதும்
சத்தியத்தின் வடிவே உன் பாதம், தினம்
போற்றிட அருள் புரிவாய் அது போதும்
(அம்மா)

முந்தை வினை யாவும் சதி செய்யும்
பிந்தை வினையாவும் விதி செய்யும்
கதியென்று உன் பாதம் பணிந்த பின்னே
விடு என்று வினை யாவும் மிரண்டோடும்
(அம்மா)




--கவிநயா

2 comments:

  1. //
    சித்திரப் பூப்போலே திருப்பாதம், அதை
    வைத்திடென் சென்னியின் மேல் அது போதும்
    //

    அழகான வரிகள்
    நன்றி அக்கா !

    ReplyDelete
  2. நன்றி ஷைலன்! ரொம்ப நாட்களுக்குப் பிறகு உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete