Tuesday, August 1, 2017

பத நிழல் போதும்

சுப்பு தாத்தா வின் ஆனந்த பைரவி விருந்து... மிக்க நன்றி சுப்பு தாத்தா!

கீதாம்மா வின் குரலிலும்... இரட்டை விருந்தாக..மிக்க நன்றி கீதாம்மா!

என் மனம் உருகாதோ?

உன்னடி பணியாதோ?

இரு விழி வழியாதோ?

பழ வினை கழியாதோ?



இதயத்தில் ஒரு ஏக்கம்

உதயத்தை எதிர் நோக்கும்

இருளினை அது ஓட்டும்

வரவர ஒளி கூட்டும்



கரு விழி கடை நோக்கில்

பிறவியும் கடைத் தேறும்

பலபிற விகள் தோறும்

பத நிழலது போதும்



இதழ் நெளியும் சிரிப்பில்

இதயத்தில் பூ வாசம்

மனம் மகிழும் களிப்பில்

மதுவென உன் நேசம்


--கவிநயா

(ஏனோ இம்முறை ப்ளாகரில் படம் இணைக்க முடியவில்லை.)

2 comments:

  1. உன் அருமையான கவிதைக்கு என் பங்கு இதோ -->


    ஒருகணம் சென்னியிலுன்

    பதம் பட்டால் போதும் ;

    பறந்தோடும் அஞ்ஞானம் ;

    மகிழ்ந்தாடும் எந்தன் மனம் !


    அன்புமகள் கவிநயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !



    காற்று வீச அம்மிகூடப்

    பறக்கும் ஆடித் திங்களிலே

    ஆற்றுப் பெருக்கெடுக்கும்

    பதினெட்டாம் நாளினிலே

    புவியில் வந்து ,சிவையே!உனைச்

    செவ்வாய்தோறும் செந்தமிழில்

    கவிபாடிப் பரவும் சேய்தன்

    நலங்காப்பாய் நாராயணி!

    ReplyDelete
  2. உங்கள் பாடல் வரிகள் மிக அருமை அம்மா. அத்துடன் மறவாமல் வந்து ஆசிகளை கவித்துவமாகவும் வழங்கியதற்கு மிக மிக நன்றி. நீங்களும், மற்றும் அனைவரும் அன்னை அருளால் நலமுடன் இருக்க பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete