Monday, August 21, 2017

உன்னைச் சுற்றும் என் விழி


கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

வண்டு போல எந்தன் விழி உன்னைச் சுற்றுதே

வஞ்சி உந்தன் வடிவழகில் உள்ளம் சிக்குதே

(வண்டு)



வட்ட மதி பட்டு முகம் பார்க்கும் போதிலே

தொட்ட வினை யாவும் என்னை விட்டு ஓடுதே

(வண்டு)



சிந்தையெல்லாம் திருமுகமே சிந்து பாடுதே

விந்தை உந்தன் கருணை என்று வியந்து போகுதே

மந்தி போல மயங்கும் மனமும் மாறிப் போனதே

மாயம் போல வந்த துன்பம் மறைந்து போனதே

(வண்டு)

 
--கவிநயா 

2 comments:

  1. "சிந்தையெல்லாம் திருமுகமே சிந்து பாடுதே
    விந்தை உந்தன் கருணை என்று வியந்து போகுதே"

    அழகான வரிகள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அம்மா!

      Delete