சுப்பு தாத்தா வின் இசையில், ஹம்ஸத்வனி ராகத்தில்...அனுபவித்துப் பாடியிருக்கிறார்... மிக்க நன்றி தாத்தா!
கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!
என் மனதில் நீயும் இருப்பாயோ, அம்மா வெண்ணிலவாய் நீயும் சிரிப்பாயோ? (என் மனதில்) பௌர்ணமியின் நிலவாய் பூரண எழில் வடிவாய் பாலைவன நதியாய் என்னை நனைப்பாயோ, எந்தன் பாடல் கேட்டு ஓடி வந்தள்ளி அணைப்பாயோ? (என் மனதில்) சித்தத்தில் உன்னை வைத்து பக்தியிலே திளைத்திருக்க நித்திலமே எனக்கொரு வழி சொல்வாயோ, என்னைப் பத்திரமாய் உன்னிடம் சேர்த்துக் கொள்வாயோ? (என் மனதில்) --கவிநயா
No comments:
Post a Comment