Monday, August 14, 2017

என் குரல் கேட்டு வர வேணும்!





கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

அம்மா உந்தன் அருகிருக்க ஆசை கொண்டேனே
சும்மா சும்மா உன் பெயரைக் கூவிச் சொன்னேனே

கன்றின் குரல் கேட்டு
ஓடி வரும் பசு போல்
எந்தன் குரல் கேட்டு
நீயும் வர வேணும்
(அம்மா)          
உன் முகத்தைப் பார்க்கும் போது உள்ளம் களிக்கும்
உன் மடியில் தூங்கும் போது துயரும் சிரிக்கும்

கன்றின் குரல் கேட்டு
ஓடி வரும் பசு போல்
எந்தன் குரல் கேட்டு
நீயும் வர வேணும்
(அம்மா)         

உன் கையைப் பிடித்துக் கொண்டு உலகினில் நடப்பேன்
உன் புகழைப் பாடிக் கொண்டு பிறவியைக் கடப்பேன்

கன்றின் குரல் கேட்டு
ஓடி வரும் பசு போல்
எந்தன் குரல் கேட்டு
நீயும் வர வேணும்
              (அம்மா)          


--கவிநயா

6 comments:

  1. ஒவ்வொரு வரியும் அப்படி ஒரு அழகு ! என் மனத்தைப் படம் பிடித்துப் பதிவு செய்தாப்போல ?

    ReplyDelete
    Replies
    1. அப்படியா. ரொம்ப சந்தோஷம் + நன்றி லலிதாம்மா!

      Delete
  2. முதலில் அக்காவுக்கு லேட்டா பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

    அழகான வரிகள்
    நன்றி அக்கா !

    ReplyDelete
    Replies
    1. பி.நா. வாழ்த்துக்கும், வாசிப்புக்கும் மிக்க நன்றி, ஷைலன்!

      Delete
  3. மிக்க நன்றி கவிநயாம்மா இணைத்தமைக்கு!

    ஓ தங்களுக்குப் பிறந்தநாளா! மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! அன்னையைப் பாடும் தங்களுக்கு அந்த அன்னை குறையாத செல்வம் எல்லாமும் அருளட்டும்! என்ற பிரார்த்தனைகளுடன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பி.நா. ஆடி 18. மிக்க நன்றி கீதாம்மா.

      Delete