எழிருவே என் தாயே, கருணை
பொழி அமுதம் என்றும் நீயே
(எழிலுருவே)
சிரசினில் மணிமுடி ஒளிர்ந்திருக்க, அதன்
ஒளியினில் பிறை நுதல் மகிழ்ந்திருக்க
உச்சியில் சிந்தூரம் திகழ்ந்திருக்க, இரு
மச்ச விழி கருணை பொழிந்திருக்க
(எழிருவே)
சிறு இதழ் நெளிவினில் குறு நகை தவழ
கரு நிறக் கண்டன் மனம் அதைக் கண்டு மகிழ
பளிங்கெனும் கன்னங்களில் அவன் முகம் ஒளிர
பொலிந்திடும் நிலவென உன் முகம் மிளிர
(எழிருவே)
--கவிநயா
தவழ, மகிழ ,ஒளிர , மிளிர கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .
ReplyDelete