துன்பம் மிகுந்து வருகையிலே
உள்ளம் உன்னை நாடுமே
இன்பம் ஒன்று வந்து விட்டால்
தன்னில் தானே ஆழுமே
இன்ப துன்பம் எது வந்தாலும்
உன் நினைவே வேண்டுமே
உன்னை எண்ணும் இன்பம்
அந்த இன்பம் ஒன்று போதுமே!
முழு மதி போல் எழில் மிகுந்த
முகம் படைத்த அன்னையே
மழு பிடித்த மன்னனுக்கு
பாதி மேனி தந்தையே
பொழி கருணை விழியிரண்டால்
புவியைக் காக்கும் அன்னையே
கொழி தமிழால் உன்னைப் பாடும்
இன்பம் போதும் போதுமே!
துவண்டு விழும் கொடியினுக்குக்
கொழு கொம்பான அன்னையே
மிரண்டு அழும் பிள்ளைகளை
அரவணைக்க வந்தையே
திரளும் கொள்ளை அன்பினாலே
துயரம் தீர்க்கும் விந்தையே
வளரும் அன்பால் உன்னைப் பாடும்
இன்பம் போதும் போதுமே!
கன்றின் குரல் கேட்டு வரும்
பசுவைப் போல வரணுமே
குன்றிலிட்ட விளக்கு போல
மனதில் ஒளிர வேணுமே
மன்றின் மீது நின்று ஆடும்
ஈசனுடன் உன்னையே
என்றும் நல்ல தமிழில் பாடும்
இன்பம் போதும் போதுமே!
--கவிநயா
Monday, August 17, 2015
Thursday, August 13, 2015
வா தாயி !

வா தாயி !
ஆடிவெள்ளி நாயகியே!ஆதிசக்தி!
வாடித்தாயி ஏழவாசல் காலவச்சி!
தாழிவெண்ணைத் திருடும் ஆயன்தங்கச்சி!
கூழு படச்சிக் கும்பிடுவோம் பூசவச்சி !
ஆடிவெள்ளி நாயகியே!ஆதிசக்தி!
வாடித்தாயி ஏழவாசல் காலவச்சி!
பஞ்சுக்காலு பட்ட இடம் பசுமையாகணும்;
புஞ்சைகூட பொன்னு வெளையும்பூமியாகணும்;
ஆடிவெள்ளி நாயகியே!ஆதிசக்தி!
வாடித்தாயி ஏழவாசல் காலவச்சி!
பஞ்சமெல்லாம்போயி ஏழநெஞ்சு குளிரணும்;
தஞ்சமுன்னு வந்தோம்.நீயி கண்ணத்தொறக்கணும்.
ஆடிவெள்ளி நாயகியே!ஆதிசக்தி!
வாடித்தாயி ஏழவாசல் காலவச்சி!
Monday, August 10, 2015
வாருமம்மா!
மலர்களெல்லாம் உனக்கே மாரியம்மா, என்
மனதினிலே மணக்க வாருமம்மா!
கனிகளெல்லாம் உனக்கே காளியம்மா,
என்
மனதினில் கனிந்திருக்க வாருமம்மா!
(மலர்களெல்லாம்)
மண்டி வரும் வேதனைகள்
மந்திரமாய்த் தீர்ப்பவளே!
கொண்டு வந்த வினைகளெல்லாம்
கொன்றொழிக்கும் தூயவளே!
முத்துத் தமிழ்ப் பாடல் கேட்டு
மாரியம்மா
முல்லை மலர்ச் சிரிப்பழகி வாருமம்மா!
(மலர்களெல்லாம்)
அண்டி வரும் அடியவர்க்கு
அருள் நிழல் தருபவளே!
சண்டியெனவே வந்து
சங்கடங்கள் களைபவளே!
வேகங் கொண்ட வேங்கையளே காளியம்மா
சூலங் கொண்டு எம்மைக் காக்க வாருமம்மா!
(மலர்களெல்லாம்)
--கவிநயா
Monday, August 3, 2015
இன்ப நிலை தருவாய்!
இடப வாகனத்தில் எழுந்தருள்வாய்
தேவி
இடர்களெல்லாம் களைந்து அருள்
புரிவாய் தேவி
சுடர் அமுதீசனுடன் சொக்கன் சபேசனுடன்
இடம் அமர்ந்து வருவாய், இன்ப
நிலை தருவாய்!
(இடப)
கடம்பவன அமர்ந்த கற்பகமே
விடம் அமுதாக்கித் தந்த அற்புதமே
தொடரும் வினை விரட்டும் பொற்பதமே,
உன்னைத்
தொழுதால் அருள் கிடைக்கும் அக்கணமே!
(இடப)
அகமெங்கும் உனதன்பால் கனிந்திடவும்
ஜகமெங்கும் உனதருளால் நிறைந்திடவும்
சகலமும் நீயென நான் உணர்ந்திடவும்,
என்
சகலமும் உன்னைச் சரண் அடைந்திடவும்
(இடப)
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.shyamartworks.com
Sunday, August 2, 2015
தாயே ! காத்தருள்வாய்!

தாயே ! காத்தருள்வாய்!
கவிநயத்தேனூறுந் தமிழ்ப்பாமலர் தூவி
சிவையே!செவ்வாய்தோறும் உனைப் பாடி உருகும்
ஆணிப்பொன்மகள் பிறந்த நன்னாளாம் இன்று
ஆடிபெருக்காய் நீ அருள்பெருக்கு அவள்மேல் !
கோடிகோடிச் செவ்வாய்கள் அவள் பார்க்க வேண்டும் !
பாடலால் பக்தரைப் பரவசமாக்க வேண்டும் !
பொங்கும் நல்வளத்தோடு அவள் வாழ வேண்டும் !
எங்கிருப்பினும் அவளை நீ காக்க வேண்டும் !
அன்புமகள் கவிநயாவுக்கு இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள் !
Subscribe to:
Posts (Atom)


