முத்து முத்தாக் கண்ணீர் விட்டேன்
முத்து மாரி யம்மா - நா
முன்ன செஞ்ச வெனையெல்லாம்
முழுக வெப்பா யம்மா
கொத்துக் கொத்தாக் கண்ணீர் விட்டேன்
கோட்டை மாரி யம்மா - நா
கொண்டு வந்த வெனையெல்லாம்
கருக வெப்பா யம்மா
சித்தங் கலங்குதடி
சமயபுரத் தம்மா - நீ
சித்த வந்து கண்ணு தொறக்க
வேணுமடி யம்மா
பித்துப் புடிக்குதடி
பாளையத்து அம்மா - நீ
பெத்த புள்ள கலங்குறத
பார்ப்பதென்னடி சும்மா?
--கவிநயா
முத்து மாரி யம்மா - நா
முன்ன செஞ்ச வெனையெல்லாம்
முழுக வெப்பா யம்மா
கொத்துக் கொத்தாக் கண்ணீர் விட்டேன்
கோட்டை மாரி யம்மா - நா
கொண்டு வந்த வெனையெல்லாம்
கருக வெப்பா யம்மா
சித்தங் கலங்குதடி
சமயபுரத் தம்மா - நீ
சித்த வந்து கண்ணு தொறக்க
வேணுமடி யம்மா
பித்துப் புடிக்குதடி
பாளையத்து அம்மா - நீ
பெத்த புள்ள கலங்குறத
பார்ப்பதென்னடி சும்மா?
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.virudhunagar.in/
சும்மா இல்லே கவிநயா,
ReplyDeleteஅம்மா அருள் தர ஓடி வந்திடுவா!
எளிமையா அருமையா இருக்கு.
அன்னையின் படம், கவிதை அருமை கவிநயா.
ReplyDeleteவருக வருகவே விருதை நிலைபெறும்
ReplyDeleteகருமுகிலே அருள் பொழிக பொழிகவே!
வாங்க ராமலக்ஷ்மி. ரொம்ப நாளா இந்தப் பக்கம் காணுமேன்னு நினைச்சேன் :)
ReplyDelete//சும்மா இல்லே கவிநயா,
அம்மா அருள் தர ஓடி வந்திடுவா!//
அப்டியே அவ காதுலயும் போட்டு வைங்க :)
மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
//அன்னையின் படம், கவிதை அருமை கவிநயா.//
ReplyDeleteஅம்மா படம் ரொம்ப அழகுல்ல? பார்த்தோன்ன பிடிச்சிருச்சு. வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி கைலாஷி.
//வருக வருகவே விருதை நிலைபெறும்
ReplyDeleteகருமுகிலே அருள் பொழிக பொழிகவே!//
ஆகா, ரொம்ப அழகா இருக்கு குமரா. நீங்க அப்பப்ப கவிதை எழுதுவீங்கன்னு தெரியும். இதையே அடிப்படையா வச்சு ஒண்ணு எழுதுங்களேன்... உங்களுக்கு இருக்கும் தமிழ் வாசிப்புக்கு சொற்கள் அருமையா வந்து விழும்.
வருகைக்கு மிக்க நன்றி.
இந்த சினிமா பாட்டையெல்லாம் சாமி பாட்டு ஆக்குவாங்களே அவங்களைப் போல வேற ஒரு பாட்டை கொஞ்சம் மாத்தி இங்கே போட்டேன் அக்கா. நான் எழுதலை. :-)
ReplyDeleteஒரிஜினல் பாட்டு:
வருக வருகவே திருமலை உறைந்திடும்
கருமுகிலே அருள் பொழிக பொழிகவே
http://kannansongs.blogspot.com/2006/12/3.html
அப்படியா? ஆனாலும் நீங்க நல்லாவே எழுதுவீங்கன்னு தெரியும் குமரா :)
ReplyDeleteதந்தனத்தோம் தந்தனத்தோம்
ReplyDeleteதானே தா னானே
தந்தனத்தோம் தந்தனத்தோம்
தானே தா னானே
மெட்டு ஜூப்பரு-க்கோ! பாடிக் கொடுங்கப்பா இந்தப் பாட்டை!
எளிமையே இனிமைக்கா!
//எளிமையே இனிமைக்கா!//
ReplyDeleteநன்றி கண்ணா. நீங்களே பாடுங்களேன்... :)
கொத்துக் கொத்தாக் கண்ணீர் விட்டேன்
ReplyDeleteகோட்டை மாரி யம்மா - நா
கொண்டு வந்த வெனையெல்லாம்
கருக வெப்பா யம்மா
கவிநயா தங்கை அருமையாண பாடல்.படமும் ஜோர். இந்த வரிகள் சேலம் கோட்டை மாரியம்மந்தானே. சேலத்திற்கு சமீபத்தில் சென்று இருந்த நான் மாரியம்மன் கோவிலுக்கு போனேன். அங்கு 50 வருடங்களுக்கு முன் என் தாயுடனும் தந்தையுடனும் சிறுவனாக வணங்கிய அம்மனைக் கண்டேன்.பழைய நினைவுகளுடன் திரும்பினேன்.
கொத்துக் கொத்தாக் கண்ணீர் விட்டேன்
ReplyDeleteகோட்டை மாரி யம்மா - நா
கொண்டு வந்த வெனையெல்லாம்
கருக வெப்பா யம்மா
கவிநயா தங்கை அருமையாண பாடல்.படமும் ஜோர். இந்த வரிகள் சேலம் கோட்டை மாரியம்மந்தானே. சேலத்திற்கு சமீபத்தில் சென்று இருந்த நான் மாரியம்மன் கோவிலுக்கு போனேன். அங்கு 50 வருடங்களுக்கு முன் என் தாயுடனும் தந்தையுடனும் சிறுவனாக வணங்கிய அம்மனைக் கண்டேன்.பழைய நினைவுகளுடன் திரும்பினேன்.
இந்த பாடலை யதுகுல காம்போதி ராககத்தில் பாட முயற்சி செய்திருக்கிறேன்.
ReplyDeleteவாருங்கள்.
சுப்புரத்தினம்
http://menakasury.blogspot.com
வாங்க தி.ரா.ச. ஐயா.
ReplyDelete//சேலத்திற்கு சமீபத்தில் சென்று இருந்த நான் மாரியம்மன் கோவிலுக்கு போனேன். அங்கு 50 வருடங்களுக்கு முன் என் தாயுடனும் தந்தையுடனும் சிறுவனாக வணங்கிய அம்மனைக் கண்டேன்.பழைய நினைவுகளுடன் திரும்பினேன்.//
நீங்கள் அம்மாவை பார்த்து வந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி :)
//கவிநயா தங்கை அருமையாண பாடல்.படமும் ஜோர்.//
மிக்க நன்றி ஐயா.
//இந்த பாடலை யதுகுல காம்போதி ராககத்தில் பாட முயற்சி செய்திருக்கிறேன்.
ReplyDeleteவாருங்கள்.//
காம்போதியில் உருக்கமாக இருக்கிறது சுப்பு தாத்தா. மிக்க நன்றி.
Super
ReplyDeleteநான் பாடட்டுமா அக்கா
ReplyDeleteமிக்க நன்றி சுரேஷ்குமார். பாடுங்கள்!
ReplyDelete