Thursday, February 12, 2009
துர்கை சித்தரின் 'துக்க நிவாரண அஷ்டகம்'
மங்கல ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீக்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே
கங்கணபாணியன் கனிமுகம் கண்ட நல் கற்பகக் காமினியே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
(ஜெய ஜெய சங்கரி)
காணுறு மலரெனக் கதிரொளி காட்டி காத்திட வந்திடுவாள்
தானுறு தவ ஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள்
மானுறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
(ஜெய ஜெய சங்கரி)
சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
என் குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்தநல் துர்க்கையளே
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
(ஜெய ஜெய சங்கரி)
தணதண தந்தண தவிலொலி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்
கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்
பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய்
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
(ஜெய ஜெய சங்கரி)
பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்ச நல்பாணியளே
கொஞ்சிடும் குமரனை குணமிகு வேழனை கொடுத்த நல்குமரியளே
சங்கடம் தீர்த்திடச் சமரது செய்த நற்சக்தி எனும் மாயே
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
(ஜெய ஜெய சங்கரி)
எண்ணிய படி நீ அருளிட வருவாய் என் குல தேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி அதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
(ஜெய ஜெய சங்கரி)
இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்றுநீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமதை தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
(ஜெய ஜெய சங்கரி)
ஜெய ஜெய பாலா சாமுண்டீஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய ஜெயந்தி மங்களகாளி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
(ஜெய ஜெய சங்கரி)
Subscribe to:
Post Comments (Atom)
iNTU VELLI KIZHAMAIYUM ATHUVUMAGA
ReplyDeleteTHUKKA NIVARANA ASHTAKAM KAEKKA
ARULIYATHARKKU NANTI...
சூப்பர். மிக்க நன்றி குமரா.
ReplyDeleteஅப்படியே அன்னை நடனம் ஆடுற மாதிரியே இருக்கு!
ReplyDeleteகந்த சஷ்டி கவசத்தில் பிள்ளை நடனம் ஆடுவான்! இங்கு அம்மாவா? :)))
இப்போ கேள்விகள் (வழக்கம் போல) :))
//கங்கணபாணியன்// - யார்?
//மாதவர் மொழியாள்// அவர் மொழியா?
//பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் // - இது என்ன?
//பஞ்ச நல்பாணியளே// - இது என்ன?
//கொஞ்சிடும் குமரனை// - இது மட்டும் நல்லாவே புரியுது கொஞ்சிடும் குமரன்! :)))
அம்மன் பாட்டு பதிப்பகத்தில் குமரன் வந்திருப்பது
ReplyDeleteவைகை நதிக்கரையில் அழகரைக் கண்டதுபோல் இருக்கிறது.
துக்க நிவாரணி பதிகம் வழக்கமான் மெட்டில் கேட்பது நன்றாக இருக்கிறது.
இதை ஒரு ராக மாலிகையாக பாடினால் எப்படி இருக்கும் என்று நினைத்ததின்
விளைவு தான் எனது இரண்டு முயற்சிகள்.
கானடா, ஜோன்புரி, ஹின்தோளம், அடாணா, சஹானா, பூபாளம் ஆகிய
ராகங்கள் என்று நினைத்துக் கொண்டு பாடியிருக்கிறேன்.
வருக:
சுப்பு ரத்தினம்.
க்ளென்ப்ரூக்.
பாடலைக்கேட்க
ReplyDeleteவருக:
http://menakasury.blogspot.com
சுப்பு ரத்தினம்.
க்ளென்ப்ரூக்.
நன்றி பெயர் சொல்ல விரும்பாத நண்பரே.
ReplyDeleteநன்றி கவிநயா அக்கா.
ReplyDeleteநன்றி இரவி.
ReplyDeleteகங்கணபாணியன் - சிவபெருமான்
மாதவர் சொன்ன மொழி மந்திர மொழி; அம்மொழியாக அம்மந்திரங்கள் ஆனவள்.
பொங்கு அரிமாவினில், பொங்கும் சிம்மத்தின் மேல் வந்தாள் அன்னை நம் தலை மேல் தன் பொன்னடி வைத்துப் பொருந்திட.
பஞ்ச நல் பாணியள் - ஐந்துவிதமான மலர்க்கணைகள் உடையவள். மேல் விவரம் 'சௌந்தர்யலஹரி' பதிவிலோ 'மதுரையம்பதி' பதிவிலோ தேடுங்கள்.
அறிவினாக்களுக்கும் நன்றி இரவி. :-)
நன்றி சுப்புரத்தினம் ஐயா. அம்மன் பாட்டு பதிப்பகத்தைத் தொடங்கிவிட்டு அப்பப்ப காணாமல் போய்விடுகிறேன்; அதனால் தான் சித்திரா பௌர்ணமி போல் தோன்றுகிறது. :-)
ReplyDeleteபாடலைக் கேட்டு மகிழ்ந்தேன் ஐயா. தங்கள் ஆசிகளுக்கு மிக்க நன்றி.
பாடல் நல்லாருக்கு தாத்தா.
ReplyDelete