Monday, February 16, 2009

உலகாளும் அன்னை போற்றி !



மீன்போன்ற விழியாலே மேதினியை ஆள்கின்ற
மங்கை மீனாட்சி போற்றி!

காசியிலே வீற்றிருந்து காசினியைக் காக்கின்ற
காசி விசாலாட்சி போற்றி!

அமுதீசன் ஒருபாகம் அமர்ந்துஅர சோச்சுகின்ற
அன்னை அபிராமி போற்றி!

பூலோகம் முதலான ஈரே ழுலகாளும்
புவனேஸ் வரி போற்றி!

துஷ்டர்தமைத் தொலைத்துத் துயரங்களைத் தூசாக்கும்
துர்க்கையின் அடிகள் போற்றி!

மலைபோன்ற துன்பங்களைச் மடுவாக்கிக் காக்கின்ற
மங்கையர்க் கரசி போற்றி!

அம்மாவென் றழைத்தவுடன் அமுதாக வந்துநிற்கும்
அன்னையவள் அன்பு போற்றி!

தாயேஎன் றழைத்தவுடன் தவறாமல் அருளும்அவள்
தங்கமணித் தாள்கள் போற்றி!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://flickr.com/photos/8190822@N02/2274782243

12 comments:

  1. அன்னையின் படத்தைப் போலவே போற்றியும் பளிச்சென்று இருக்கிறது.

    ReplyDelete
  2. நன்றி குமரா. படம் எனக்கும் பிடிச்சது :)

    ReplyDelete
  3. அழகான உங்கள் பாடலை
    ஆரபி ராகத்தில் கேட்டு மகிழ‌
    வாருங்கள்.
    http://menakasury.blogspot.com

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  4. நல்ல பதிவு. அம்மன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

    ReplyDelete
  5. பாடல் இனிமையா இருக்கு தாத்தா. நீங்க தொகுத்திருக்கும் படங்களும் அழகு :) மிக்க நன்றி.

    ReplyDelete
  6. வாங்க ஆனந்த். முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  7. வாங்க மௌலி. வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.

    ReplyDelete
  8. மீனாக்ஷி படமும் பாட்டும் அருமை. படத்தைப் பார்க்கும் போது"பாப நாசினி பாசமோசனி" மீனாக்ஷி தேஹிமுதம் என்ற பூர்விகலயாணி ராகப் பாடலில் வரும் வரிகளைப் பாடிக்கொண்டே தீபவளியன்று அன்னையிடம் ஐக்கியமான முத்துஸ்வாமி தீக்ஷதரின் ஞாபகம் வந்தது.

    ReplyDelete
  9. வாங்க தி.ரா.ச. ஐயா. உங்க பின்னூட்டம் ஏக்கத்தைத் தந்தது. அந்நாளும் எந்நாளோ? வருகைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  10. அம்மன் படம் மிகவும் அருமை, அனைவரையும் காத்து இரட்சிக்க அன்னையின் பாதம் பணிவோம்.

    அருமையான கவிதைக்கு நன்றி கவிநயா.

    ReplyDelete
  11. வாங்க கைலாஷி. மிக்க நன்றி.

    ReplyDelete