ஆறைப் போல ஓடுதம்மா - மனம்
திசைகள் எல்லாம் அலையுதம்மா
கடலாம் உன்னைச் சேர மறந்து
பாதை தவறிப் போகுதம்மா
ஆற்றின் பாதை வகுத்திடுவாய் - அதன்
அறிவை உன்மேல் திருப்பிடுவாய்
போற்றி உன்னைப் பணிகின்றேன் - என்னை
ஏற்று அபயம் அளித்திடுவாய்
காற்றாய் என்னில் கலந்திடுவாய் - நெஞ்சில்
கனலாய் நின்று கனன்றிடுவாய்
ஊற்றாம் உந்தன் கருணையில் ஒருதுளி
என்மேல் தெறித்திடச் செய்திடுவாய்
நாற்றாய் உன்னை நட்டு விட்டேன் - நீ
கதிராய் வளர்ந்து நலம் தருவாய்
சேறாய்க் குழம்பிய எந்தன் மனதில்
செந்தாமரையாய் மலர்ந்திடுவாய்!
--கவிநயா
மிக அருமையாக இருக்கிறது...சூரி சார் வந்து பாடிக் கொடுப்பார் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteவாங்க மௌலி. மிக்க நன்றி.
ReplyDeleteகிழவன் தேஷ் ராகத்தில் பாட முயற்சிக்கிற காட்சியை
ReplyDeleteநீங்கள் பார்க்கவேண்டிய இடம்
http://ceebrospark.blogspot.com
சுப்பு ரத்தினம்
நல்லதொரு வேண்டுதல் அக்கா.
ReplyDeleteஆகா, அருமையா இருக்கு தாத்தா. ராகம் வெகு பொருத்தம். நானும் கத்துக்கணும் :) மிக்க நன்றி.
ReplyDeleteவாங்க குமரா. மிக்க நன்றி.
ReplyDeleteA refined picassa upload was available here. Please come and see your song in the backdrop of lotuses.
ReplyDeletehttp://sachboloyaar.blogspot.comm
தாமரைகள் வெகு அழகு, நீங்களும் அனுபவிச்சு பாடியிருக்கீங்க :) மிக்க நன்றி தாத்தா.
ReplyDelete//சேறாய்க் குழம்பிய எந்தன் மனதில்
ReplyDeleteசெந்தாமரையாய் மலர்ந்திடுவாய்//
சேற்றில் செந்தாமரை என்பதை எம்புட்டு எளிமையாச் சொல்லிட்டீங்க-க்கா!
சரி, சூரி சார் கூட நீங்க ஒரு நிரந்தர கால்ஷீட் போட்டுக்கலாம்!
* பாடல்கள் = கவிநயா
* இசை, திரையிசை, பின்னணி = சூரி சார்
* வெளியீடு = கவி ஆடியோ வீடியோ விஷன்! :)))
//சேற்றில் செந்தாமரை என்பதை எம்புட்டு எளிமையாச் சொல்லிட்டீங்க-க்கா!//
ReplyDeleteமனசு அப்படி இருக்கு :) ரசனைக்கு மிக்க நன்றி கண்ணா.
//சரி, சூரி சார் கூட நீங்க ஒரு நிரந்தர கால்ஷீட் போட்டுக்கலாம்!//
அவர்தான் எல்லாருக்குமேதானே பாடித் தர்றாரு. எல்லார்கூடயுமே நிரந்தர கால்ஷீட்தான் :)