Monday, March 16, 2009

வேணும்...




ஒம் மேல தெனம் நூறு
பாட்டெழுத வேணும்
ஓயாம ஒம் புகழ
நாம் பாட வேணும்
எம் பாட்டக் கேட்டதும் நீ
ஓடி வர வேணும்
மகுடி கேட்ட நாகம் போல
மயங்கி வர வேணும்

கண் காணும் காட்சியெல்லாம்
நீயாக வேணும்
செவி கேக்கும் ஒலியிலெல்லாம்
ஒங்கொரலே வேணும்
ஒன் நெனப்பே நொடிதோறும்
எம் மனசில் வேணும்
ஒன்னடியே கதி யின்னு
நாந் துதிக்க வேணும்!


--கவிநயா

7 comments:

  1. ஒன்னையே நீ பாடி
    உவந்துக்க வேணும்
    ஒன் குரலா என் பாட்டு
    ஓடி வர வேணும்
    என்னையே ஒரு பொருட்டாய்
    ஏந்திக்கொள்ள வேணும்
    அன்னையே நீ தானே
    அணைச்சுக்க வேணும்

    ReplyDelete
  2. //ஒன்னையே நீ பாடி
    உவந்துக்க வேணும்
    ஒன் குரலா என் பாட்டு
    ஓடி வர வேணும்
    என்னையே ஒரு பொருட்டாய்
    ஏந்திக்கொள்ள வேணும்
    அன்னையே நீ தானே
    அணைச்சுக்க வேணும்//

    அசத்திட்டீங்க கவிஞரே! (குமரரே :)

    ReplyDelete
  3. கவிநயக் கவியும், குமரக் கவியும் ஒன்னோட ஒன்னு துள்ளி விளையாடது! :)

    அணைச்சுக்கும் அம்மா உன்
    ஆதரவு தரணும்!
    நெனைச்சுக்கும் போதெல்லாம்
    நீயோடி வரணும்!
    கனைச்சிக்கும் பிள்ளைக்கு
    கனி முத்தம் தரணும்!
    வினைச்சிக்கல் தீர்த்து என்னை
    விளக்கேற்றி விடணும்!

    ReplyDelete
  4. சேயோனே ஆனேன் என்னைச்
    சீர் ஆட்டு வாயே!
    தீயோனே ஆனா லும் உன்
    அன் பூட்டு வாயே!
    தாயே உன் சேய்க்கு என்றும் அம்மாவே வேணும்!
    மாயே மக மாயி என்
    மாதாவே வேணும்!

    ReplyDelete
  5. வாங்க கண்ணக் கவிஞரே! பாட்டுக்குப் பாட்டு நல்லாருக்கு :) அதுவும் ரெண்டாவது கவிதை ரொம்ப பிடிச்சது. வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. உங்கள் பாடலை முதல் தரம் படிக்கும்போது,
    ' ஓம் ' மேலெ தினம் நூறு என்று படித்து அதே போல் சாருகேசி ராகத்தில் மெட்டமைத்தேன். பிறகு தான் அது ' ஒம் மேலே ' என்று தெரிந்தது.
    இப்போது புன்னாக வராளி ராகத்தில் அமைந்து இருக்கிறது.

    பாட்டின் துவக்கத்தில் துர்கா மந்திரம் சொல்லப்படுகிறது. நடுவில் ஓம் என்றும் பன்முறை ஒலிக்கக் கேட்பீர்.

    சுப்பு ரத்தினம்.
    http://menakasury.blogspot.com

    ReplyDelete
  7. //பாட்டின் துவக்கத்தில் துர்கா மந்திரம் சொல்லப்படுகிறது. நடுவில் ஓம் என்றும் பன்முறை ஒலிக்கக் கேட்பீர்.//

    நல்லது தாத்தா. துர்கா மந்திரத்துடன் கேட்கும்போது தனிச் சிறப்புடன் இருக்கு :) மிக்க நன்றி.

    ReplyDelete