Thursday, March 19, 2009

பாயும் கங்கை சூடு வோனை பாதம் சூடி கொண்டவள் !

வழக்கத்திற்கு மாறாதான்... ஆனா ஏனோ இன்னிக்கு இந்த பாடலை பதிய தோணிச்சு. ஏற்கனவே நவராத்திரிக்காக இங்கே பதிஞ்சதுதான்...

சுப்பு தாத்தா பாடித் தந்தது இங்கே இருக்கு.





வீரதுர்க்கை வடிவெடுத்து வினைகள் தீர்க்க வந்தவள்!
தீரவேங்கை யாகி வந்து அசுரர்களை வென்றவள்!

கோபத்திலே தகதகத்து நெருப்பைப் போல ஜொலிப்பவள்!
வேகத்திலே சுழன்றடித்து காற்றைக் கூட ஜெயிப்பவள்!

மோகத்திலே உழலும் மனதின் மாயம் நீக்குகின்றவள்!
சோகத்திலே துவளும் போது தோள் கொடுக்கும் தாயவள்!

தேவருக்கு அருள வென்றே தோற்றம் கொண்டு வந்தவள்!
மூவருக்கும் முதல்வியாகி முத் தொழில்கள் புரிபவள்!

காளி யாகி வந்த போதும் கனிந்த அன்பால் குளிர்ந்தவள்!
நீலியாகி சூலியாகி தீமை எரிக்கும் தீ அவள்!

ஆயுதங்கள் ஏந்திக் கொண்டு அச்சம் நீக்க வந்தவள்!
பாயும் கங்கை சூடு வோனை பாதம் சூடி கொண்டவள்!

நேசம் கொண்ட நெஞ்சுக்குள்ளே தேசு கொண் டொளிர்பவள்!
வீசும் தென்ற லன்பில் எந்தன் மாசு நீக்கு கின்றவள்!

சரண மென்று பதம் பணிந்தால் சஞ்சலங்கள் தீர்ப்பவள்!
வரணு மென்று தொழுது நின்றால் வாசல் வந்து காப்பவள்!

ஏழுலகும் ஆளுகின்ற எங்கள் அன்னை வாழ்கவே!
எட்டுத் திக்கும் ஏத்தும் எங்கள் அன்னை அடிகள் பணிகவே!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://i151.photobucket.com/albums/s140/sidatha/durga_QA91_l.jpg

18 comments:

  1. http://www.youtube.com/watch?v=cXk40xmaIeI

    ReplyDelete
  2. //பாயும் கங்கை சூடு வோனை பாதம் சூடி கொண்டவள்!//

    கங்காதரனைத் தன் பாதத்தில் சூடிக் கொண்டவளா?
    இல்லை கங்காதரனின் பாதத்தைத் தான் சூடிக் கொண்டவளா?

    விளக்கம் ப்ளீஸ்-க்கா! :)

    திராச ஐயா என்ன திடீர்-ன்னு அக்கா-ன்னு கூப்புடறாரு?
    சுவாமிக்கே நாதன் மாதிரி, நீங்க சுவாமிநாதி ஆயிட்டீங்களா என்ன? :)

    ReplyDelete
  3. வாங்க சுப்பு தாத்தா. இந்த மெட்டும் அழகா பொருந்தியிருக்கு. படத்திலிருப்பது உங்க வீட்டு பூஜையறையா? அங்கே இருக்கற அம்மா அழகு :) மிக்க நன்றி தாத்தா.

    ReplyDelete
  4. வாங்க தி.ரா.ச. ஐயா. வணக்கம் :) பாடல் படிக்கலையா?

    ReplyDelete
  5. வருக கண்ணா.

    //கங்காதரனைத் தன் பாதத்தில் சூடிக் கொண்டவளா?
    இல்லை கங்காதரனின் பாதத்தைத் தான் சூடிக் கொண்டவளா?//

    முதல் பொருளை மனதில் வச்சுதான் எழுதினேன்... இங்கே பாருங்க, குமரன் ரெண்டு பொருளும் சரிதான், பொருந்தி வருதுன்னு சொல்லியிருக்கார் :)

    //திராச ஐயா என்ன திடீர்-ன்னு அக்கா-ன்னு கூப்புடறாரு?//

    அதான் எனக்கும் தெரியல :)

    ReplyDelete
  6. இப்பாவிச் சிறுவன் சொன்னதை எல்லாம் அப்பாவிச் சிறுவன் ஏற்றுக் கொள்வான் என்றா நினைத்தீர்கள் அக்கா? :-)

    ReplyDelete
  7. //குமரன் (Kumaran) said...
    இப்பாவிச் சிறுவன் சொன்னதை எல்லாம் அப்பாவிச் சிறுவன் ஏற்றுக் கொள்வான் என்றா நினைத்தீர்கள் அக்கா? :-)//

    ஆகா!
    இப்-பாவின் சிறுவன் சொன்னால்
    அப்-பாவின் சிறுவன் ஏற்பேனோ?
    அப்பாவின் சிறுவன் பேர் குமரன்! அவனைத்
    தப்பாமால் சார்வார் தமக்கு!
    :)

    குமரன் இரண்டும் சரி-ன்னு மட்டுமே சொல்லி இருக்கார்! ஏற்க மாட்டேன்!
    விளக்கம் சொன்னாத் தான் ஏற்பேன்!
    நல்லக விளக்கம் நமச் சிவாயவே! :)

    ReplyDelete
  8. சிவன் தன் தலையில் கங்கையைச் சூடிக் கொண்டானா?
    இல்லை...கங்கை தன் கால்களில் சிவனின் ஜடாமுடியைச் சூடி, அவனையே சூடிக் கொண்டாளா?? :)

    சம பங்கு கொடுத்தவன் கதியைப் பாத்தீங்களா மக்களே? கால்களில் சூடிக் கொண்டாளாம் சம பங்கு தந்தவனை! சிவா சிவா! இந்தக் கவி அக்காவின் பெண்ணாதிக்கத்தைக் கேட்பார் இல்லையா? :)))))

    ReplyDelete
  9. சரண மென்று பதம் பணிந்தால் சஞ்சலங்கள் தீர்ப்பவள்!
    வரணு மென்று தொழுது நின்றால் வாசல் வந்து காப்பவள்!
    ஓ அதனால்தான் பாரதி காட்டு வெளியிடையே அம்மா நின்றன் காவுலுற வேண்டும் என்று பாடினானோ/
    வணக்கம் போட்டது அக்கா சென்னை வராமாதிரி காற்றுவாக்கில் ஒரு செய்தி வந்தது அதான்.

    ReplyDelete
  10. http://www.stanford.edu/~keyarp/maha%20kali.jpg

    http://www.dollsofindia.com/dollsofindiaimages/paintings3/shiva_QL98.jpg

    அப்பாவிச் சிறுவரே. இப்படங்களைப் பாருங்கள். மேல் விளக்கங்கள் எல்லாம் பொருத்தமான படங்களை நிறைய இட்டு இடுகைகள் எழுதும் நீங்கள் தான் சொல்ல வேண்டும். படங்களே இடாமல் எழுதும் என்னால் ஆகாது.

    பி.கு.: வலையுலக பித்தளைவாதிகளுடன் சேர்ந்துவிட்டதால் நீங்கள் மேல் விளக்கங்கள் மட்டும் இல்லாமல் ஃபீமேல் விளக்கங்களும் தருவீர்கள் என்று தெரியும்.

    ReplyDelete
  11. //கால்களில் சூடிக் கொண்டாளாம் சம பங்கு தந்தவனை!//

    குமரன் தந்த படங்களைப் பாருங்க கண்ணா! அதில் உள்ள முதல் படத்தை வைத்து எழுதினதுதான் இது. அந்தக் கதை எனக்கு ஓரளவுதான் தெரியும்... காளியுடைய சீற்றம் அடங்காத போது சிவன் அவளைத் தடுக்க அவள் பாதையை மறித்துப் படுத்துக் கொண்ட போது ஏற்பட்டது... (உத்தேசமாதான் சொல்றேன்பா... தவறு இருப்பின் தெரிந்தவர்கள் திருத்தவும்)

    //இந்தக் கவி அக்காவின் பெண்ணாதிக்கத்தைக் கேட்பார் இல்லையா? :)))))//

    கேளுங்க, கேளுங்க...! சக்தி இல்லையேல் சிவம் இல்லை! :) கறைக் கண்டனுக்கு மூத்தவள், மூவா முகுந்தற்கு இளையவள், (என்னோட) அம்மாதானே? :)

    ReplyDelete
  12. பாடல் வாசிச்சதுக்கு நன்றி தி.ரா.ச. ஐயா.

    //வணக்கம் போட்டது அக்கா சென்னை வராமாதிரி காற்றுவாக்கில் ஒரு செய்தி வந்தது அதான்.//

    காற்று கொண்டு வந்த சேதி சரிதான். இறையருள் இருந்தால் உங்களையும் தரிசிக்கும் எண்ணம் உண்டு :)

    ReplyDelete
  13. படங்களுக்கு மிக்க நன்றி குமரா :)

    ReplyDelete
  14. டிஸ்கி: எங்கும் நிறைந்திருக்கும் இறையை அம்மாவாகப் பார்க்க எனக்குப் பிடிக்கிறது. அவ்ளோதான். பிறர் நம்பிக்கைகளையும் பெரிதும் மதிக்கிறேன். அதனால், நான் சொன்னவற்றை யாரும் தவறான கோணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாம்... :)

    ReplyDelete
  15. //குமரன் (Kumaran) said...
    அப்பாவிச் சிறுவரே. இப்படங்களைப் பாருங்கள்.//

    பாத்துட்டேன் குமரரே! :)

    //மேல் விளக்கங்கள் எல்லாம் பொருத்தமான படங்களை நிறைய இட்டு இடுகைகள் எழுதும் நீங்கள் தான் சொல்ல வேண்டும்.//

    தோடா, படங்காட்ட நீங்க! வெளக்கஞ் சொல்ல நானா? :))

    //பி.கு.: வலையுலக பித்தளைவாதிகளுடன் சேர்ந்துவிட்டதால்//

    ஹிஹி! நான் எப்பமே ஈயம் தான்! கொத்ஸ் அண்ணாச்சி தான் பித்தளை! :))

    அக்கா சொன்னபடி, சிவபிரானைத் தன் பாதங்களில் சூடிக் கொண்டவள் தான் படம் காட்டுது!
    சிவபிரான் பாதங்களை இவள் சூடிக் கொண்டதாக ஒன்னும் இல்லையே! சிவலிங்கம் முன்னாடி லைட்டா குனியறாங்க எங்க அம்மா! உடனே பாதத்தைச் சூடிக் கிட்டாங்களா? நோ! நோ! My amma is super power! :)

    அக்கா, நீங்க முதல் பாயிண்ட்டை வச்சி தானே எழுதனீங்க!
    இரண்டாம் பாயிண்ட்டை வச்சி இல்லை தானே? :))

    //கேளுங்க, கேளுங்க...! சக்தி இல்லையேல் சிவம் இல்லை! :) கறைக் கண்டனுக்கு மூத்தவள், மூவா முகுந்தற்கு இளையவள்//

    மூவா முகுந்தற்கு இளையவளா? அப்போ சரி! :)))

    //(என்னோட) அம்மாதானே? :)//

    (எங்களோட) அம்மா! :)

    ReplyDelete
  16. //காளியுடைய சீற்றம் அடங்காத போது சிவன் அவளைத் தடுக்க அவள் பாதையை மறித்துப் படுத்துக் கொண்ட போது ஏற்பட்டது... (உத்தேசமாதான் சொல்றேன்பா... தவறு இருப்பின் தெரிந்தவர்கள் திருத்தவும்)//

    சரி தான்-க்கா!

    //டிஸ்கி: //

    அட, நமக்குள்ள என்ன-க்கா டிஸ்கி எல்லாம்?
    விஸ்கி வேணும்-ன்னா ஒரு பாட்டில்....ஹிஹி! வேணாம்! :)

    //எங்கும் நிறைந்திருக்கும் இறையை அம்மாவாகப் பார்க்க எனக்குப் பிடிக்கிறது.//

    உண்மை தானே-க்கா!
    யாதுமாகி நின்றாய் காளி
    எங்கும் நீ நிறைந்தாய்!
    நந்தகோபம் சுதம் தேவீ!
    நாராயணி நமோஸ்துதே!!

    ReplyDelete
  17. //(எங்களோட) அம்மா! :)//

    நீங்க இப்படி சொல்லணும்னே நான் அப்படி சொன்னேன் :)

    // My amma is super power! :)//

    இங்கேயும் மாத்துங்க! :) Our ammaa :)

    //அக்கா, நீங்க முதல் பாயிண்ட்டை வச்சி தானே எழுதனீங்க! //

    ஆமாம்...

    //அட, நமக்குள்ள என்ன-க்கா டிஸ்கி எல்லாம்?//

    அதானே... நல்லது கண்ணா :)

    ReplyDelete