Monday, June 1, 2009

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே !

இந்த முறை ஊருக்கு போன போது திருவேற்காடு போயிருந்தேன். தற்செயலாக அம்மாவை தங்கரதத்தில் பார்க்க கிடைச்சது. ஊஞ்சலிலும் அம்மா அற்புதமான அலங்காரத்தோட எழுந்தருளி இருந்தா :)

(மறுநாளே வடபழனியில் அவள் பிள்ளையையும் தங்கரதத்தில் காண முடிஞ்ச அதிர்ஷ்டத்தை என்னன்னு சொல்றது! அதுமட்டுமில்லாம சந்தனக் காப்போட ராஜ அலங்காரம் வேற :)


ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா நீயும் ஆடுகவே!
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அன்பே அழகே ஆடுகவே!

அகிலம் யாவும் அகம் மகிழ
ஆனந்தத் தில்மனம் மிகக் குளிர
பரவசத் தில்இரு விழி கசிய
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே!

'ஓம் ஓம் ஓம்' என்று உரைத்திடவே
உலகெங்கும் உன்பெயர் ஒலித்திடவே
உள்ளத்தை உன்னொளி நிறைத்திடவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே!

ஜரிகைப் பட்டாடைகள் அலங்கரிக்க
முத்துமணி ஆரங்கள் ஜொலிஜோலிக்க
நறுமண மாலைகள் இசைந்தசைய
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே!

மூவரும் தேவரும் பணிந்திடவே
மூவுலகும் உனை ஏற்றிடவே
முத்தமிழால் தினம் போற்றிடவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே!

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா நீயும் ஆடுகவே!
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அன்பே அழகே ஆடுகவே!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://sakthiyathirai.blogspot.com/2008/12/blog-post.html

10 comments:

  1. ஆடுக ஊஞ்சல் ஆடுகவே!
    ஆனந்த ஊஞ்சல் ஆடுகவே!
    கவிநயக் கவியில் ஆடுகவே
    புவிநயம் பெறவே ஆடுகவே!

    ஆடுக ஊஞ்சல் ஆடுகவே!
    ஆடிடும் பாதம் ஆடுகவே!
    நாடிடும் மனமும் ஆடுகவே
    நானும் நீயுமாய் ஆடுகவே! - அம்மா
    நானும் நீயுமாய் ஆடுகவே!

    ReplyDelete
  2. ச்வீட்! :) அழகா இருக்கு ஆடல் பாடல் :) இவ்வளவு அருமையா எழுதற நீங்க, குமரன் எல்லாம் ஏன் அடிக்கடி எழுதறதில்லைன்னு நினைச்சேன்... அப்படி எழுத ஆரம்பிச்சிட்டீங்கன்னா நாங்க எழுதறதெல்லாம் யாரு படிப்பா, அந்த பெருந்தன்மையாலதான் இருக்கும்னு தோணுச்சு :) நன்றி கண்ணா.

    ReplyDelete
  3. வாங்க மௌலி. ரொம்ப நன்றி :)

    ReplyDelete
  4. அகிலம் யாவும் அகம் மகிழ
    ஆனந்தத் தில்மனம் மிகக் குளிர
    பரவசத் தில்இரு விழி கசிய
    ஆடுக ஊஞ்சல் ஆடுகவே!

    அருமையா இருக்கு

    ReplyDelete
  5. அடேடே, பூங்குழலி, வாங்க! எதிர்பாராத வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி :) ரசனைக்கு நன்றி.

    ReplyDelete
  6. க‌ருமாரி அம்ம‌னை ஊஞ்ச‌லில் வைத்து ஆடுக‌ ஊஞ்ச‌ல் ஆடுக‌வே என‌ அற்புத‌மாக‌க் க‌விதை
    எழுதிய‌ க‌வி ந‌யா அவ‌ர்க‌ளுக்கு தாத்தாவின் வாழ்த்துக்க‌ள். நான் அமெரிக்காவில் ஸ்டாம்ஃபோர்டு நகரத்தில் இருக்கும் எனது மகள் தனது மகனுக்கு திருவேற்காடு அம்மன் அருளினால் பிறந்த செல்வனுக்கு ப்ரஜ்வல் கருமாரி எனப்பெயர் இட்டிருக்கிறாள். நான் சென்னை சென்ற‌ந்ததும் திருவேற்காடு செல்கிறேன். எனக்கூறி இரு தினங்களுக்கு முன்பு தான் சென்னை திரும்பினேன். வந்தவுடன் அம்மனைக்காண பாட வாய்ப்புகிட்டியதும் அவள் அருளே. பாடலை ஹிந்தோளம் எனும் ராகத்தில் இட்டிருக்கிறேன். வழக்கம்போல எனது பதிவுகள் ஏதேனும் ஒன்றிலோ அல்லது பிச்சு பேரன் எனும் யூ ட்யூபிலோ நேரம் கிடைக்கும்போது கேட்கலாம்.

    வாழ்த்துக்கள்.
    வளர்க.

    சுப்பு ர‌த்தின‌ம்
    http://menakasury.blogspot.com

    ReplyDelete
  7. வாங்க தாத்தா. பேரனுக்கும் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

    //நான் சென்னை சென்ற‌ந்ததும் திருவேற்காடு செல்கிறேன். எனக்கூறி இரு தினங்களுக்கு முன்பு தான் சென்னை திரும்பினேன். வந்தவுடன் அம்மனைக்காண பாட வாய்ப்புகிட்டியதும் அவள் அருளே.//

    உண்மைதான். மிக்க மகிழ்ச்சி தாத்தா.

    ராகம் அழகாகப் பொருந்தி, பாடல் இனிமையாய் ஒலிக்கிறது. ஊர் திரும்பியவுடன் ஓய்வினை மறந்து பாடித் தந்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  8. மற்றுமொரு அருமையான எளிமையான பாடல் ! :-)

    ReplyDelete
  9. வாங்க ராதா.

    //மற்றுமொரு அருமையான எளிமையான பாடல் ! :-)//

    மிக்க நன்றி.

    ReplyDelete