வர வேண்டும் வர வேண்டும் பரமேஸ்வரி – வரம்
தர வேண்டும் தர வேண்டும் ஜகதீஸ்வரி!
(வர வேண்டும்)
பரம் என்று உனை அடைந்தேன்
ஒரு வரம் தா – என்றன்
சிரம் தனில் பதம் பதித்து
திரு வரம் தா!
(வர வேண்டும்)
திருவடி நினை வொன்றே
நொடி தொறும் வேண்டும் – உன்
நினைவினில் தினம் திளைத்து
மகிழ் வரம் வேண்டும்!
மறுபடி மறுபடி
பிறந்தாலும் உனையே
சரண் என்று அடைந்திடும்
சுக வரம் வேண்டும்!
(வர வேண்டும்)
--கவிநயா
படத்துக்கு நன்றி:
கைலாஷி
ஏ கிழவி !! இங்கே வந்து கேளு . கவி நயா பரமேஸ்வரி மேல ஒரு பாட்டு எழுதியிருக்காங்க.
ReplyDeleteஅத நான் ஹிந்தோளத்தில பாடியிருக்கேன்.
அதான் கேட்டுண்டே இருக்கேனே !! அது சரி . இருமல் தான் வாட்டி எடுக்கிறதே !! இப்ப எதுக்கு
இத்தனை ச்ரமப்பட்டுண்டு பாடறேள் !!
இவ்வளவு பொருள் பதிந்த பாடலை பாடாது இருக்கமுடியுமா !! இருமல் என்னோட கூட இருக்கறதா
முடிவு செஞ்சுட்டப்பறம் என்ன செய்யறது.. பாட்டுக்கு இசை அமைக்கறதை விட்டுட முடியுமா ? அது சரி,
பரமேஸ்வரிகிட்ட என்ன வரம் கேட்கறது !!
இப்ப சத்தைக்கு உங்க இருமல் நின்னு நார்மல் ஆகனும்னு வேண்டிக்கங்க...
நம்ம டாக்டர் மூளைலே நல்ல மருந்தா தோணமும்னு நான் நினைச்சேன்.
சுப்பு தாத்தா.
மீனாட்சி பாட்டி.
http://menakasury.blogspot.com
http://Sury-healthiswealth.blogspot.com
அருமை தாத்தா.
ReplyDeleteஎன் மனசில் தோன்றியதும் இதே ராகம்தான். ஹிந்தோளம்னு தெரிஞ்சுக்கிட்டேன் :)
இருமல் சீக்கிரம் உங்களை விடணும்னு நானும் வேண்டிக்கிறேன். இத்தனை சிரமத்திலயும் பாடினதுக்கு மிக்க நன்றி தாத்தா.
/மறுபடி மறுபடி
ReplyDeleteபிறந்தாலும் உனையே
சரண் என்று அடைந்திடும்
சுக வரம் வேண்டும்!
/
இந்த வரம் கிடைத்தால்
இறப்பு எல்லாம் ????????
// பரம் என்று உனை அடைந்தேன் //
ReplyDeleteஅந்தாதி இங்கும் ஓடிக் கொண்டிருக்கிறது. :-)
//இந்த வரம் கிடைத்தால்
ReplyDeleteஇறப்பு எல்லாம் ????????//
வாங்க திகழ். கேள்வி புரியலை...
பிறவியை பிணி என்று சொன்னாலும், அவளைச் சரணடைந்து விட்டால் அவளை நினைத்து நினைத்து போற்றுவதில் உள்ள சுகமே தனி என்று சொல்ல வந்தேன். பக்திக்கு தனிச் சுவை இருக்கிறது :)
வருகைக்கு நன்றி திகழ்.
//அந்தாதி இங்கும் ஓடிக் கொண்டிருக்கிறது. :-)//
ReplyDelete'பட்டர்' இன்றி உருகுவது எப்படி? :)
'பரம்' என்ற சொல்லையே அந்தாதி படித்த பின்தான் தெரிந்து கொண்டேன்.
நன்றி ராதா.
//'பட்டர்' இன்றி உருகுவது எப்படி? :) //
ReplyDeleteசிலேடை புரிகிறது. :-)
//சிலேடை புரிகிறது. :-)//
ReplyDelete:)))
அன்னை அங்காள பரமேஸ்வரியையும் அவளைப் போற்றும் பாடலையும் இன்றுதான் கண்டேன். பாடல் அருமை அருமை.
ReplyDeleteஉங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது. மிக்க நன்றி கைலாஷி.
ReplyDelete