Monday, November 22, 2010

சிவன் பாதியள்


அரியாசனத்தினில் அரனுடன் அமர்ந்து
சரியாசனம் செய்யும் அம்பிகையே!
அரவாசனத்தினில் துயில் கொண்டிருக்கும்
அரியுடை அன்புச் சோதரியே!

இந்திரன் முதலாம் தேவர்கள் யாவரும்
பணிந்திடத் திகழ்ந்திடும் தாமரையே!
சந்திர னைமுடி சூடிய இறையுடன்
வந்தெமைக் காத்திடு தாரகையே!

அருமறைகளும் தினம் போற்றிடும் துதித்திடும்
நாயகியே எங்கள் நான்முகியே!
திருமுறைகளின் அருந் தலைவனை அணையும்
சாம்பவியே எழில் சங்கரியே!

பவமதை ஒழித்திடு தவமதை நல்கிடு
நாரணியே எங்கள் பூரணியே!
எமதுள்ளம் உறைந்திடு நிறைந்தங்கு ஒளிர்ந்திடு
சோதியளே சிவன் பாதியளே!!

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.shaivam.org/siddhanta/maardh.html

9 comments:

  1. காவிரியில் வெள்ளம் போல
    கவி நயாவின் கவிதை
    பாய்ந்தோடி வந்து
    பக்தி வெள்ளத்தில் முழுகடிக்கிறது.

    சுப்பு ரத்தினம்.
    http://menakasury.blogspot.com

    ReplyDelete
  2. //nadha bindhukalaathi namo namo, you must have heard. In the same tune, one can sing this song. of course, thatha has also tried in this raag chenchuritti.
    subbu rathinam //

    //http://www.youtube.com/watch?v=OxRGs7cT_wo//

    நாதவிந்து மெட்டில் வெகு பொருத்தமாக அமைந்திருக்கிறது, தாத்தா. எப்படி உடனுக்குடன் மெட்டமைத்து விடுகிறீர்கள்! மிக்க நன்றி.

    ReplyDelete
  3. //காவிரியில் வெள்ளம் போல
    கவி நயாவின் கவிதை
    பாய்ந்தோடி வந்து
    பக்தி வெள்ளத்தில் முழுகடிக்கிறது.//

    அந்த வெள்ளத்தில் முழுகியே கிடக்க வேண்டுமென்பதே என் விருப்பமும் :)

    ரசித்தமைக்கு நன்றி தாத்தா.

    ReplyDelete
  4. Wonderful ! அம்பாள் தரிசனம் தரும் பொழுது எங்களை(அம்மன் பாட்டுக்கு வருகை தருவோர்) எல்லாம் நினைவில் வெச்சிக்கோங்க. :-)

    ReplyDelete
  5. //Wonderful ! அம்பாள் தரிசனம் தரும் பொழுது எங்களை(அம்மன் பாட்டுக்கு வருகை தருவோர்) எல்லாம் நினைவில் வெச்சிக்கோங்க. :-)//

    அன்பு ராதா, என்னன்னு சொல்றது? ஏதோ காரணத்தால் மனசு தளர்ந்திருந்தபோது உங்க பின்னூட்டம் படிச்சேன். கடகடன்னு கண்ணில் தண்ணி வந்திடுச்சு. நன்றி தம்பீ.

    ReplyDelete
  6. paadhiyal enra solle arumai.adhupolave paattum

    ReplyDelete
  7. //paadhiyal enra solle arumai.adhupolave paattum//

    மிக்க நன்றி கலா.

    ReplyDelete
  8. கவிநயா, பெயர் மிகப் பொருத்தம்!

    அம்பாளுக்குப் பாமாலை நிறைய கட்டிப் போடுவீர்கள் போல!

    \\ sury said...
    காவிரியில் வெள்ளம் போல
    கவி நயாவின் கவிதை
    பாய்ந்தோடி வந்து
    பக்தி வெள்ளத்தில் முழுகடிக்கிறது.

    சுப்பு ரத்தினம்.
    http://menakasury.blogspot.com\\

    அரனின் சடைமுடி கங்கை போல ஊற்றாகப் பெருகிப் பின்னர் அகண்ட வெளியில் பிரவாகமாகிறது என்று சொன்னாலும் பொருத்தமாகத்தான் இருக்கிறது!

    ReplyDelete
  9. //அம்பாளுக்குப் பாமாலை நிறைய கட்டிப் போடுவீர்கள் போல!//

    அவளருளால் அவள்தாள் வணங்கி...

    //அரனின் சடைமுடி கங்கை போல ஊற்றாகப் பெருகிப் பின்னர் அகண்ட வெளியில் பிரவாகமாகிறது என்று சொன்னாலும் பொருத்தமாகத்தான் இருக்கிறது!//

    ஆத்தாடி! ஆனாலும் இது கொஞ்சூண்டு ஓவரா இல்லை? :)

    உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது. நன்றி கோபி!

    ReplyDelete