Monday, February 28, 2011

திருவடி மலரினை...


திருவடி மலரினை மனவண்டு சுற்றும்
மறுபடி மறுபடி மலரடி பற்றும்
அவளடி எழிலினில் மயங்கிடும் சித்தம்
இணையடி நிழலினை நாடிடும் நித்தம்

கிண்கிணிச் சலங்கைகள் எங்கெங்கும் ஒலிக்கும்
பொன்மணி பாதங்கள் பூக்களைப் பழிக்கும்
வெண்பிஞ்சுப் பதங்களை வேதங்கள் துதிக்கும்
தண்மலர் திருவடி நெஞ்சினில் இனிக்கும்

பொன்னடி போற்றிட பைங்கிளி வருவாய்
கண்மணியே என்றன் கருத்தினில் நிறைவாய்
உன்புகழ் பாடிட திருவருள் புரிவாய்
ஒவ்வொரு நொடியுமென் உள்ளத்தில் உறைவாய்


--கவிநயா

11 comments:

  1. "maiyo?maragathamo?.......
    ......aiyo!..........azhagudaiyaan"
    i remembered theese kambar's words on seeing ambaal's picture from which i couldn't remove my eyes.
    on seeing the beauty of her paatham inthe background of that
    dark blue saree i couldn't resist writing :
    karuneelappinnaniyil unporpatham;
    perugivaruguthathil karunaamrutham!
    parugiye bothaiyil naam paaduvom,
    "parasakthi,omsakthi,omsakthi,om"

    ReplyDelete
  2. அழகான அம்மாவுக்கு அழகான கவிதை :) நன்றி லலிதாம்மா. ஆனா நீங்க என் கவிதையை படிக்கவே இல்லையா? :(

    ReplyDelete
  3. "aanaa neenga en kavithaiyap padikkave illayaa?"
    kavinayaa,
    nalla kelvi kettaai!
    whatever i felt on seeing her sweet posture,is what yr first two verses convey.you might have noticed that my verse is also in almost the same metre as yours.so you can easily guess that i've read yrs;ofcourse,in that drunken stage i was in [on seeing the
    rarest posture of ambaal],i totally forgot to mention anything about yr poem!
    i've posted one article on one rare 'nataraajaa'song;i hope you'll find sometime to go through
    and comment.

    ReplyDelete
  4. அக்கா. ரொம்ப அழகு.!! :)
    "வெண்பிஞ்சுப் பதங்களை வேதங்கள் துதிக்கும்
    தண்மலர் திருவடி நெஞ்சினில் இனிக்கும்''
    மிக அருமை. :)

    ReplyDelete
  5. //[on seeing the
    rarest posture of ambaal],i totally forgot to mention anything about yr poem!//

    நியாயமான காரணம்தான் அம்மா :) அதனால மன்னிச்சிடலாம் :)

    ReplyDelete
  6. //"வெண்பிஞ்சுப் பதங்களை வேதங்கள் துதிக்கும்
    தண்மலர் திருவடி நெஞ்சினில் இனிக்கும்''
    மிக அருமை. :)//

    மிக்க நன்றி சங்கர் :)
    ஊர் திரும்பியாச்சா?

    ReplyDelete
  7. மனவண்டு சுற்றும்
    மலரடி பற்றும்
    மயங்கிடும் சித்தம்
    நாடிடும் நித்தம்

    எங்கெங்கும் ஒலிக்கும்
    பூக்களைப் பழிக்கும்
    வேதங்கள் துதிக்கும்
    நெஞ்சினில் இனிக்கும்

    பைங்கிளி வருவாய்
    கருத்தினில் நிறைவாய்
    திருவருள் புரிவாய்
    உள்ளத்தில் உறைவாய்
    //

    nice.:)

    ReplyDelete
  8. வருக ராஜேஷ். நன்றி :)

    ReplyDelete
  9. என்ன சொல்வேன்??? ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு பாடலை நினைவுப்படுத்துகின்றன.
    "மாசில் வீணையும்...இணையடி நீழலே"
    ...
    "அருமறைகள் பழகிச் சிவந்த பதாம்புயத்தாள்"
    ...
    "பஞ்சஞ்சு மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே"
    ...
    ...
    "ஒரு மாநொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே"

    ReplyDelete
  10. //என்ன சொல்வேன்??? ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு பாடலை நினைவுப்படுத்துகின்றன.//

    நல்லதுதானே :)

    நன்றி ராதா :)

    ReplyDelete