வானே சதமென்று வான்பார்த்த நிலம்போல
நீயே சதமென்று உனைப்பார்த்து வாழ்கின்றேன்
கருணை முகிலேஎன் கண்ணின் மணிநீயே
வருணன் போலன்பை வருஷித் தருள்வாயே!
அல்லல் படும்உன்றன் பிள்ளையைப் பாராயோ?
மின்னல் பார்வையொன்றை என்திசை வீசாயோ?
அம்மா உன்பிள்ளை தன்வினையால் படும்பாட்டை
சும்மாஒருநொடியில் உன்னால் தீர்த்தலும் ஆகாதோ?
கல்லோ உன்னுள்ளம் எனும்ஐயம் எனக்கில்லை
கனியே உன்னுள்ளம் என்பதை நானறிவேன்
துன்பப் புடம்போட்டு எனைத்தங்கம் ஆக்குதற்கோ,
அம்மா இன்னும்நீ சும்மா இருக்கின்றாய்?
--கவிநயா
"நீயே சதமென்று உனைப்பார்த்து வாழ்கின்றேன்" நானும்!
ReplyDeleteennama vaarthai vandhu viluguthu! Annai nichayam arul purivaal.
ReplyDeleteNatarajan.
//"நீயே சதமென்று உனைப்பார்த்து வாழ்கின்றேன்" நானும்!//
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி, லலிதாம்மா :) நன்றி.
//Annai nichayam arul purivaal.//
ReplyDeleteஆசிகளுக்கு நன்றி திரு.நடராஜன்.
நீயே சதமென்று உனைப்பார்த்து வாழ்கின்றேன்.. My favo lines too.. :)
ReplyDelete//நீயே சதமென்று உனைப்பார்த்து வாழ்கின்றேன்.. My favo lines too.. :)//
ReplyDeleteநன்றி சங்கர்.