Thursday, February 2, 2012

தாயே!நான் உன் சேய்!

 

தாயே!நான் உன் சேய்!
(சென்ற ஆண்டு  எனது 'சர்வம் நீயே'வலையில் கலாவின்
குரலில் அளித்த 'அன்னை'பாட்டு மீண்டும் 'அம்மன் பாட்டு '
அன்பர்களுக்காக கீழே!)


தாயே !என்னைப் பூங்கரத்தால்
வாரி அள்ளம்மா!
சேயாய் என்னை உந்தன் தோளில்
சாய்த்துக்கொள்ளம்மா!

பிறவிக்கடலில் மூழ்கக் கண்டும்
பாராமுகம் ஏனம்மா?
புகல் வேண்டிக் கதறும் பிள்ளைக்கு
பெற்றவள் பதில் 'மௌனமா?'

[தாயே !என்னைப் பூங்கரத்தால்
வாரி அள்ளம்மா!
சேயாய் என்னை உந்தன் தோளில்
சாய்த்துக்கொள்ளம்மா!]

முன்வினைப் பயன் தந்தபின்னும்
சினம் ஏன் தணியவில்லையோ?
திருந்தி வருந்தும் குழந்தை கண்டு
இதயம் இளகவில்லையோ?

[தாயே !என்னைப் பூங்கரத்தால்
வாரி அள்ளம்மா!
சேயாய் என்னை உந்தன் தோளில்
சாய்த்துக்கொள்ளம்மா!]

துட்டப்பிள்ளையைத் திட்டியடித்துத்
திருத்தும் உரிமை உனக்குத்தான்!
தாயுன் மடியில் புகுந்து கொஞ்சும்
உரிமை எனக்கே எனக்குத்தான்!

[தாயே !என்னைப் பூங்கரத்தால்
வாரி அள்ளம்மா!
சேயாய் என்னை உந்தன் தோளில்
சாய்த்துக்கொள்ளம்மா!]

1 comment:

  1. //தாயுன் மடியில் புகுந்து கொஞ்சும்
    உரிமை எனக்கே எனக்குத்தான்!//

    ஆமாம். எனக்கே எனக்குத்தான்!

    அழகான பாடலை இங்கேயும் பகிர்ந்தமைக்கு நன்றிகள் அம்மா.

    ReplyDelete