Friday, February 10, 2012

மகாலட்சுமி!வந்தருள்வாய்!

மகாலட்சுமி!வந்தருள்வாய்!


முராரிமார்புறை மகாலட்சுமி!
எங்கள் இல்லம் வருவாய் நீ!

மங்களம் பொங்கிட அருள்வாய் நீ!
திருமணத்திற்காகப் பொருள்கேட்ட
இளைஞனின் ஏழ்மை கண்டிரங்கி

தேசிகருன்மேல் ஸ்ரீஸ்துதி பாட -வேதாந்த
தேசிகருன்மேல் ஸ்ரீஸ்துதி பாட
தங்கமழை பொழிந்த ஸ்ரீதேவி!

முராரிமார்புறை மகாலட்சுமி!
எங்கள் இல்லம் வருவாய் நீ!

மங்களம் பொங்கிட அருள்வாய் நீ!

பிக்ஷையாய் அழுகிய நெல்லி தந்த
பெண்ணின் வறுமை கண்டிறங்கி
உன்னை சங்கரர் துதிபாட -ஆதி

சங்கரர் உன்னைத்துதி பாட
பொன்நெல்லி மழை பொழிந்தவளே!

முராரிமார்புறை மகாலட்சுமி!
எங்கள் இல்லம் வருவாய் நீ!

மங்களம் பொங்கிட அருள்வாய் நீ!

வித்யாரண்யர்முன் பொன்சொரிந்த
உத்தமி!உன்னருளாலவரும்
இடையரை அரசராய் அமர்த்திடவும்,
வித்யாநகரம் உருவானதன்றோ?
விஜயநகரம் உருவானதன்றோ?

முராரிமார்புறை மகாலட்சுமி!
எங்கள் இல்லம் வருவாய் நீ!

மங்களம் பொங்கிட அருள்வாய் நீ!

2 comments:

  1. ஆக அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம் என்று முப்பெரும் தத்துவ ஆசாரியர்களுக்கும் அன்னை பொன்மழை பொழிந்து அருளியிருக்கிறாள். அருமை. நன்றி அம்மா.

    வெள்ளிக்கிழமையில் பாட ஒரு நல்லதொரு பாட்டு. அன்னை கமலையின் திருவருள் எங்கும் தங்கட்டும்.

    ReplyDelete