Monday, February 6, 2012

ஆதரவு யாரெனக்கு?


உன்னை விட்டால் யாரெனக்கு தாயே - என்
கண்ணீரைத் துடைத்தெறிய வாயேன்!
கண்ணோடும் மனதோடும் தாயே - உன்னை
சேர்த்தணைத்துப் பாடுகிறேன் வாயேன்!

ஆதரவு யாரெனக்கு
மாதரசி உன்னை யன்றி?
வேதனைகள் எதுவரினும்
வென்றிடுவேன் உன்னை அண்டி!

நெஞ்சமெல்லாம் இனிக்கச் செய்யும்
நினைவெது உன்னை யன்றி?
தஞ்சமென்று நான் அடைந்தேன்
தங்கத்தாய் உன்னை அண்டி!


--கவிநயா

படத்துக்கு நன்றி: தினமலர்

2 comments:

  1. சேயொன்று சாய்ந்தழத் தேடுதம்மா

    தாயுந்தன் வேயுறு தோளினையே;

    காயமுற்றவ்வுள்ளம் வாடுதம்மா,

    தீயென வேதனைத் தாளலையே;

    ஓயாது மென்நெஞ்சம் நாடுதம்மா,

    மாயே !உந்தன் மலர்த்தாளினையே;

    "கா!"என்றுனை வேண்டிப்பாடுதம்மா,

    தூய இசைத்தமிழ்ப் பாடலையே;


    நேயமாய் சேயை நீ நோக்கிடம்மா!

    நாயகி!மகள் நலன்காத்திடம்மா !

    ReplyDelete
  2. ஆகா. ரொம்ப ரொம்ப அருமையாக வந்து விழுந்திருக்கு வார்த்தைகள். நன்றி லலிதாம்மா.

    ReplyDelete