சுப்பு தாத்தா குரலில், ஹமீர் கல்யாணி ராகத்தில்! கேட்டு மகிழுங்கள் :) மிக்க நன்றி தாத்தா!
அம்மா அம்மா என் நெஞ்சம்
அம்மா அம்மா என் நெஞ்சம்
அங்கும் இங்கும் அலைவதுமேன்?
அழகே உருவாய் நீ இருக்க
அழுக்கைத் தேடிப் போவதுமேன்?
உன்றன் பிள்ளை என்னை நீ
ஒரு முறை பார்க்கக் கூடாதோ?
கண்ணால் என்றன் இருள் விரட்டி
கண்ணாய்க் காக்கக் கூடாதோ?
கூரிய செவியும் உனதாக,
கூறிய நாவும் எனதாக,
சற்றே திரும்பிப் பாரம்மா!
விட்டேன் பாரம் உனதம்மா!
பலமுறை உன்னைப் பணிந்து விட்டேன்
– உன்
பதங்களிலே நான் விழுந்து விட்டேன்
உன்பெயர் ஒருமுறை சொல்லி விட்டேன்
– இனி
பயமில்லை எனக்கு தெளிந்து விட்டேன்!
கூரிய செவியும் உனதாக,
கூறிய நாவும் எனதாக,
சற்றே திரும்பிப் பாரம்மா!
விட்டேன் பாரம் உனதம்மா!
--கவிநயா
baaraththai ammaamele pottaachchu!
ReplyDeletethanks both!
ஆமாம், அம்மா. என்ன பண்ணலாம்? ஒரு பக்கம் அவளை நினைச்சாலும் பாவமாதான் இருக்கு. நம்ம பாரத்தையெல்லாம் அவ மேல ஏத்தறமேன்னு :(
ReplyDeleteவாசிச்சதுக்கு நன்றி அம்மா.