Monday, August 6, 2012

அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம், தமிழில் - 2


அயிகலி கல்மஷ நாஷினி காமினி
வைதிக ரூபிணி வேதமயே
க்ஷீர சமுத்பவ மங்கள ரூபிணி
மந்த்ர நிவாஸினி மந்த்ரனுதே
மங்கள தாயினி அம்புஜ வாஸினி
தேவ கணாஷ்ரித பாதயுதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
தான்யலக்ஷ்மி சதா பாலயமாம்
.


கலியுக தோஷங்கள் களைபவளே
பக்தர் உள்ளங்கள் கவர்ந்திட்ட காமினியே
நான்மறை களின் எழில் வடிவினளே
            நான் மறைகளும் போற்றிடும் தேவியளே
பாற்கடல் கடைகையில் அதன் நடுவினிலே
            உதித்திட்ட மங்கள ரூபிணியே
மந்திரங்களிலே இருப்பவளே
            அம் மந்திரங்கள் போற்றும் மாதவியே
மங்கள வடிவாய்த் திகழ்பவளே
            எழில் பங்கய மலரினில் வசிப்பவளே
தேவர்கள் அனைவரும் பணிபவளே
            அவர்க் கடைக்கலம் தந்து காப்பவளே
மதுசூதனனின் காதலியே
என்றும் ஜய ஜய ஜய ஜய ஜய முனக்கே
 அன்புடன் உன்னடி பணிகின்றோம்
            எமை தான்யலக்ஷ்மியே காத்தருள்வாய்! 


--கவிநயா

(தொடரும்)

2 comments:

  1. அருமை !

    சுப்புசாருக்காக காத்திருந்தேன்:-(

    ReplyDelete
  2. நன்றி லலிதாம்மா!

    அவரை நான்தான் ஆடிக்கிருத்திகைக்கு பாடித் தரச் சொல்லிக் கேட்டேன், அதில் பிஸியாய் இருந்துட்டார் போல!

    ReplyDelete