Monday, August 13, 2012

அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம், தமிழில் - 3


சுப்பு தாத்தா சிந்து பைரவியில் (சமஸ்கிருதம்) பாடியது இங்கே.  தன் பேரனுடன் நாட்டையில் (தமிழ்) பாடியது இங்கே. மிக்க நன்றி தாத்தா!


ஜெயவர வர்ஷிணி வைஷ்ணவி பார்கவி
மந்த்ர ஸ்வரூபிணி மந்தரமயே
ஸுரகண பூஜித ஷீக்ர ஃபலப்ரத
ஞான விகாஸினி ஷாஸ்த்ரனுதே
பவபய ஹாரிணி பாப விமோசனி
சாது ஜனாஷ்ரித பாதயுதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
தைர்யலக்ஷ்மி சதா பாலயமாம்
.

வெற்றிகளை அளித் தருள்பவளே
            மா விஷ்ணுவின் சக்தியாய் இருப்பவளே
பிருகுவின் புதல்வியாய்ப் பிறந்தவளே
            நல்ல மந்திர ரூபிணி நாயகியே
தேவரும் வணங்கிடும் தேவியளே
            நற் பலன்களை விரைந்தளித் தருள்பவளே
ஞானத்தின் ஒளியினைத் தருபவளே
            அருஞ் சாத்தி ரங்களும் தொழுபவளே
பிறவியின் பயங்களைக் களைபவளே
            எந்தப் பாபமும் போக்கி அருள்பவளே
துறவியர் வணங்கிடும் மோட்சத்தை அளித்திடும்
            தாமரைப் பாதங்கள் கொண்டவளே
மதுசூதனனின் காதலியே
என்றும் ஜய ஜய ஜய ஜய ஜய முனக்கே
 அன்புடன் உன்னடி பணிகின்றோம்
            எமை தைர்யலக்ஷ்மியே காத்தருள்வாய்! 


--கவிநயா

(தொடரும்)

படத்துக்கு நன்றி: http://www.astromandir.com/mahalakshmiyagya.html

10 comments:

  1. ஜய வர வர்ஷிணி = வெற்றி ( பெறுவதற்கான வழிகளைத்) தரும் வரங்களைப் பொழிபவள்

    பவ பய ஹாரிணி = பிறவியின் (துன்பங்களைக்கண்டு ஏற்படும்) பயங்களைப் போக்குபவள்
    கண்ணபிரான அவர்களின் பதிவில் அனுபவம் என்பதில் பவம் என்பதற்கு அவர் சொல்லும்
    பொருளைக் காண்க. பவம் என்றால் பிறப்பு. பயம் நான்காவது ப . உண்டாவது எனப் பொருளாகும்

    சாது = அறவழிப்பட்டோர் ( துறவியர் என்பது எக்ஸ்டென்டட் மீனிங்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. நன்றி தாத்தா. பவபய காரினி சரியாகத்தான் இருக்கிறது. சாது / துறவி இருவரும் வெவ்வேறா? முதல் வரி மட்டும் கொஞ்சம் மாற்ற முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  4. எக்கச்சக்க தட்டச்சுப் பிழை. அவசரம். மன்னிகவும்.

    முதல் வரி மாற்றியாச்சு. நன்றி தாத்தா.

    ReplyDelete
  5. 'பிறவியின் பயங்களைக் களைபவளே' என்று மாற்றியிருக்கிறேன்.

    ReplyDelete
  6. சுப்புசார் தமிழில் பாடவில்லையே:-(( சம்ஸ்க்ருதப்பாட்டுதான்கேட்டேன்;both சிந்துபைரவியில் தான்!??

    ReplyDelete
  7. தமிழிலும் பாடித் தந்தார் அம்மா. வேலையிலிருக்கும்போது அவசரமாகச் சேர்த்தேன். இப்போது நீங்கள் சொன்ன பிறகு மறுபடி முயற்சித்தேன். தமிழ் வீடியோவின் "share" -ஐச் சேர்த்தாலும் சமஸ்கிருத சுட்டியேதான் வருகிறது. நேரம் கிடைக்கையில்தான் பார்க்க வேண்டும். நன்றி லலிதாம்மா.

    ReplyDelete
  8. இப்போ சரியா இருக்கு அம்மா. நேரம் கிடைக்கும்போது கேளுங்க...

    ReplyDelete
  9. பேரனுடன் சேந்து ஜமாய்ச்சுட்டார் சுப்புசார்!நன்றி

    ReplyDelete
  10. சுப்பு தாத்தா, பேரன் சார்பில் நன்றி லலிதாம்மா!

    ReplyDelete