சுப்பு தாத்தா சஹானா ராகத்தில் பாடியதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!
அயி ககவாஹினி மோஹினி சக்ரிணி
ராகவி வர்தினி ஞானமயே
குணகண வாரிதி லோக ஹிதைஷிணி
ஸ்வரஸப்த பூஷித கானனுதே
சகல சுராசுர தேவ முனீஷ்வர
மானவ வந்தித பாதயுதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
சந்தானலக்ஷ்மி த்வம் பாலயமாம்.
ராகவி வர்தினி ஞானமயே
குணகண வாரிதி லோக ஹிதைஷிணி
ஸ்வரஸப்த பூஷித கானனுதே
சகல சுராசுர தேவ முனீஷ்வர
மானவ வந்தித பாதயுதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
சந்தானலக்ஷ்மி த்வம் பாலயமாம்.
கருடனில் வலம் வரும் மோகினியே
கையில் சக்கரம் ஏந்திடும் நாயகியே
உலகத்தின் பந்தங்கள் பற்றுகள்
நீக்கி
ஞானமளித்திடும் உத்தமியே
நற் குண இருப்பிடமானவளே
இந்த அகிலத்திற் அருள் தரும் திருமகளே
இதயத்திற் கிதம் தரும் இன்னிசை
தந்திடும்
ஏழு ஸ்வரங்களும் பணிபவளே
வானவர் யாவரும் தானவர் அனைவரும்
வணங்கிடும் எங்களின் வசுந்தரியே
தவத்தினில் சிறந்திட்ட முனிவரும்
மனிதரும்
பணிந்திடும் பாதங்கள் உடையவளே
மதுசூதனனின் காதலியே
என்றும் ஜய ஜய ஜய
ஜய ஜய முனக்கே
அன்புடன் உன்னடி பணிகின்றோம்
எமை சந்தான லக்ஷ்மியே காத்தருள்வாய்!
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.astromandir.com/mahalakshmiyagya.html
பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதொடருங்கள்...
ReplyDeleteஅன்பு சகோதரி கவிநயாவுக்கு, மீண்டும் உங்கள் வலையில் திரு.வீஎஸ்கே -ஐத் தேடி.என் பதிவுக்குப் பின்னூட்டம் எழுதி இருக்கிறார்.நான் எழுதிய சாதாரணன் ராமாயணம் ,கிருஷ்ணாயணம் போன்ற பதிவுகள் எப்போது எழுதியதுஎன்று கேட்டு. 2011-ம் வருடம் ஜூன் மாதம் ராமாயணமும் அக்டோபர் மாதம் கிருஷ்ணாயணமும் எழுதி இருக்கிறேன் என்னும் தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன். அவருடைய மின் அஞ்சல் முகவரியோ, தொடர்பு கொள்ள வலைப் பூவோ தெரிவித்தால் உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டி இருக்காது. இடையூறுக்கு மன்னிக்கவும். தமிழில் நீங்கள் எழுதும் அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம்படித்து வருகிறேன்.
நன்றி திரு.தனபாலன் :)
ReplyDelete//G.M Balasubramaniam said...
ReplyDeleteஅவருடைய மின் அஞ்சல் முகவரியோ, தொடர்பு கொள்ள வலைப் பூவோ தெரிவித்தால் //
அண்ணாவிடம் தெரியப்படுத்தி விட்டேன். உங்களைத் தொடர்பு கொள்வதாகச் சொன்னார். வருகைக்கு நன்றி ஐயா.
பொருளை விளக்கும் இனிய பாடல்! கவிநயத்தைக் காட்டிலும், பொருளைச் சரியாகச் சொல்லவேண்டும் எனும் உங்கள் உழைப்பும், கவனமும் தெரிகிறது! அன்னையருள் அருகிலிருக்கும்!
ReplyDeleteமிகவும் நன்றி அண்ணா!
ReplyDelete