Thursday, August 2, 2012

ஆடி வெள்ளிப்பாட்டு

நல்ல சேதி சொல்லாத்தா!
(''மணப்பாறை மாடு கட்டி.."மெட்டில் பாடுவது கலா )

subbusir sings:
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=HHnj6ZEVPZU

ஆடிக்கூழு ஆக்கி வச்சி,
மாவெளக்கு ஏத்தி வச்சி,
பூவப்போட்டு பூச செஞ்சோம் செல்லாத்தா!--நீ
நேர வந்து நல்ல சேதி சொல்லாத்தா!


காஞ்ச பூமி காத்திருக்கு;
வறண்டு வானம் பாத்திருக்கு;
இருண்டு மேகம் மழை பொழிய வையாத்தா!--கண்ணத்
தொறந்து தாயே!கருண மாரி பெய்யாத்தா!


வயித்துப் பசிக்கு அவிச்ச சுண்டல்,
தவிச்ச வாய்க்குத் தண்ணீப்பந்தல்,
போட்டு ஒன்னக் கும்புடறோம் செல்லாத்தா!--சனத்த
ஆட்டிவைக்கும் வெனைய வெரட்டித் தள்ளாத்தா!


கண்ணுங்க கருணக்காத்து வீச ,
சலங்கக்குலுங்கிச் சிணுங்க வந்து,
பனங்குருத்துத் தோட்டழகி!செல்லாத்தா!--ஊரு
சனங்களுக்கு நல்ல சங்கதி சொல்லாத்தா!





11 comments:

  1. அழகான பாடல் அம்மா. கலா அவர்களின் குரலில் மிக இனிமை!

    ReplyDelete
  2. அருமை இனிமை
    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் குரல்.
    கலா மேடம் என் பாடல்களையும் பாடுவார்களா ?( பேராசையோ?)

    ReplyDelete
  3. கறைகண்டனுக்கு மூத்தவளே - அபிராமி அந்தாதியிலிருந்து சொல்லெடுத்து , எனையாளும் ஈசனையும் நினைவுறுத்தியது - நெகிழவைக்கிறது.

    ReplyDelete
  4. அப்பாடா. ஒருவர் கவனித்துவிட்டார். நானும் பல மாதங்களாக அபிராமி அந்தாதியிலிருந்து ஒரு தொடரை எடுத்து இடுகிறேன்; யாரும் கவனிக்கவில்லையே; சரி அம்மாவும் எனக்கும் மட்டுமே தெரிந்த மறைபொருளாக இருக்கட்டும் என்று நினைத்துக் கொள்வேன். இன்று சிவகுமாரன் கவனித்துவிட்டார். :-)

    ReplyDelete
  5. ஐய்ய... அப்படி ஒண்ணும் இல்லை! நான் ஒன்றும் சொல்லலையே தவிர எப்போதும் கவனிச்சிக்கிட்டுதான் இருக்கேன்! வெவ்வெவ்வே. :)

    ReplyDelete
  6. i am also singing , for the simple reason, that none not even myself can stop me from singing.
    For that is the only way I found I rid my mind of the mundane world around.
    subbu rathinam
    menakasury.blogspot.com

    ReplyDelete
  7. 1) சிவகுமார்,கவிநயா

    வந்து ரசித்ததற்கு நன்றி;

    சுப்புசார் பிரமாதமா வாயாலேயே பின்னணியோடு பாடுவதை கேட்க மீண்டும் வருக!

    2)குமரன்,
    அபிராமி அந்தாதித் தொடரை கவிநயா சொன்னாப்லே நானும்
    படிப்பது நிஜந்தான்;ஆனால் இது குமரன் செய்யும் சேவைன்னு
    தெரியாது.நன்றி !

    3)சுப்புசார்
    டும்டும் பின்னணியோடு பாட்டு சூபர் ஹிட்டாயிடும்போல இருக்கு! நன்றி !

    ReplyDelete
  8. தங்கள் பாடை கேட்டு ஆத்தா மனம் இறங்கி அருள்புறிய வந்துவிட்டாள். சொல் அழகே அழகு.👌💐

    ReplyDelete