தாயின் துதி பாடுவோம்
தண்மதி சூடும் அபிராமித்தாயே !உன்
சந்நிதியை நாங்கள் நாடி வந்தோம் ;
அன்னபூரணியே! உன் புகழை இனிய
பண்ணமைத்தே நாங்கள் பாடவந்தோம் !
பதிவிழுங்கிய நஞ்சைக் கற்பால்
நெஞ்சில் தடுத்ததேவி!
துதித்திடுவோம் தூயவளே!உன்னைத்
தேன்நிறை மலர்தூவி!
காஞ்சிகாமாட்சி, மதுரை மீனாக்ஷி ,
நாகை நீலாயதாக்ஷி,
காசி விசாலாக்ஷி என்றெங்கெங்குமுன்
கருணைத்திருக்காட்சி!
தண்மதி சூடும் அபிராமித்தாயே !உன்
சந்நிதியை நாங்கள் நாடி வந்தோம் ;
அன்னபூரணியே! உன் புகழை இனிய
பண்ணமைத்தே நாங்கள் பாடவந்தோம் !
குகனின் தாயே ! பறித்தாய் நீ பரமன்
மேனியிலே பாதி;
நிகரில்லாத நாயகி!நீ ஞானமெனும்
நித்தியஜோதி!
நல்லோரின் நலன்காப்பது என்றும்
உந்தன் நன்னீதி ;
எல்லோருமிணைந்தோதுவோம் பக்தியாய்
உந்தன் அந்தாதி!
தண்மதி சூடும் அபிராமித்தாயே !உன்
சந்நிதியை நாங்கள் நாடி வந்தோம் ;
அன்னபூரணியே! உன் புகழை இனிய
பண்ணமைத்தே நாங்கள் பாடவந்தோம் !
//துதித்திடுவோம் தூயவளே!உன்னைத்
ReplyDeleteதேன்நிறை மலர்தூவி!//
நானும்!
நன்றி லலிதாம்மா.