Wednesday, October 17, 2012

பாரதியாரின் நவராத்திரிப் பாட்டு



பராசக்தி
(மூன்றும் ஒன்றாகிய மூர்த்தி )
மாதாபராசக்தி வையமெல்லாம் நீ நிறைந்தாய் !
ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே?
ஏதாயினும் வழி நீ சொல்வாய் எமதுயிரே!
வேதாவின் தாயே!மிகப்பணிந்து வாழ்வோமே.

வாணி
வாணி கலைத்தெய்வம் மணிவாக் குதவிடுவாள்
ஆணிமுத்தைப்போலே அறிவுமுத்து மாலையினாள்
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங்காட்டுவதாய்
மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே.

ஸ்ரீதேவி

பொன்னரசி நாரணனார்தேவி ,புகழரசி
மின்னுநவரத்தினம்போல் மேனியழகுடையாள்
அன்னையவள் வையமெல்லாம் ஆதரிப்பாள் ,ஸ்ரீதேவி
தன்னிரு பொற்றாளே சரண் புகுந்து வாழ்வோமே.

பார்வதி
மலையிலே தான் பிறந்தாள் ,சங்கரனை மாலையிட்டாள் ,
உலையிலே யூதி உலகக் கனல்வளர்ப்பாள்
நிலையில் உயர்த்திடுவாள் ,நேரே அவள்பாதம்
தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே.

3 comments:

  1. அருமையான பாடல்கள்...

    நன்றிங்க...

    ReplyDelete
  2. பொருத்தமான பாடல்கள் அம்மா. மிக்க நன்றி.

    ReplyDelete
  3. 1)dhanabalanji,
    2)kavinaya,
    happy that you both liked the songs;
    thanks fr feed back.

    ReplyDelete