Monday, August 12, 2013

எவரிடத்தில் செல்வேன்?


சுப்பு தாத்தா சூப்பராகப் பாடித் தந்ததைக் கேட்டுக் கொண்டே நீங்களும் பாடுங்கள்! மிக்க நன்றி தாத்தா!


(குறவஞ்சி மெட்டு)

தானேனன்னே தானேனன்னே தனதானேனன்னே தானேனன்னே
தானேனன்னே தானேனன்னே தனதானேனன்னே தானேனன்னே

அம்மா நான் உன்னிடத்தில் ஓடோடியும் வந்து விட்டேன்
அம்மா என்னை முழுதாக உன்னிடத்தில் தந்து விட்டேன்

வாழ்நாளும் தீரும் முன்னே அம்மா உன்னை வாழ்த்த வேணும்
வாழுகின்ற நொடிதோறும் அம்மா உன்னை வணங்க வேணும்

சோதனைகள் வந்தாலும் அதை சாதனையாய்க் கொள்வேனம்மா
வெந்துயரில் வீழ்ந்தாலும் அதை செய்தவமாய்க் கொள்வேனம்மா

அம்மா உன்னை நெஞ்சில் வைத்து அதைக் கோயிலாகச் செய்தேனம்மா
அம்மா நான் உன்னையன்றி எவரிடத்தில் செல்வேனம்மா?

(fast)
தனததின்னா தனததின்னா தனததின்னா திரனா
தனததின்னா தனததின்னா தனததின்னா திரனா

உன் பெயரைச் சொல்லிடவே இந்தப் பிறப்பெடுத்தேன்
உன் புகழைப் பாடிடவே செந்தமிழைப் படித்தேன்
வஞ்சி உன்னை வணங்கிடவே வஞ்சி வடிவெடுத்தேன்
கெஞ்சி உன்றன் பஞ்சு மலர்ப் பாதங்களைப் பிடித்தேன்…
                                                பாதங்களைப் பிடித்தேன்…


--கவிநயா

9 comments:

  1. Replies
    1. நன்றி திரு.கிருஷ்ணா ரவி! முதல் வருகைக்கும் நன்றி.

      Delete
  2. தானானே கும்மிப் பாடல் ஆனந்தம் தந்தது. வேகமெட்டு அருமை!!.பகிர்விற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. அக்கா உங்கள் கவிதைகளை வாசிக்கும் போது எனக்கு
    நீலகண்ட தீட்ஸ்தரின் ஆனந்த சாகரஸ்த்வம் இல் ஒரு ஸ்லோகம்தான் நினைவுக்கு வருகிறது.
    அதில் " அம்மா ! உலகத்தில் எவளவு ஜனங்கள் இவ் உலக வாழ்க்கையை இன்பமாக அனுபவிக்ரர்கள் , அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். எனக்கோ அரைகுறை ஞானம் ஏற்பட்டதால் இந்த வாழ்க்கை துன்பத்தை தருகிறது. உன்னை விரைவில்
    அடைய துடிக்குது." என்று அம்பாளை வேண்டுவதாக இருக்கும்.

    ஆழமான கருத்துக்கள் . நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, அதுவும் அப்படியா. எனக்கு படிப்பறிவு ரொம்பவே குறைச்சல் தம்பீ. ஹ்ம்... மற்ற அறிவு மட்டும் என்னங்கிறீங்களா... அதுவும் சரிதான் :) ஆனால் இந்த விஷயத்தில் நீங்க சொன்னதைக் கேட்டு எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது! மிக்க நன்றி ஷைலன்.

      Delete
    2. "எனக்கு படிப்பறிவு ரொம்பவே குறைச்சல் தம்பீ"

      நீங்க "அரைகுறை ஞானம்" என்பதை comment பண்ணி இருக்றீங்க மாதிரி இருக்கு. நான் உங்களுக்கு அரைகுறை ஞானம் என்று சொல்லவில்லை. sankrit verses இன் தமிழ் mening அப்பிடி இருந்திச்சு. Actually தனக்கு பக்தி மார்க்கம் , ஞான மார்க்கம் , கர்மமார்க்கம் எதுவும் தெரியாது உன் பாதங்களை பூரணமாக சரண் அடைவதை தவிர என்று அடுத்தடுத்த verses களில் வரும் அதை தான் mean பண்ணி இருந்தேன்.

      Delete
    3. இல்லை தம்பீ! அதற்காகச் சொல்லவில்லை. நீலகண்ட தீட்சிதர் பற்றிச் சொன்னீங்க இல்லையா? நான் அவருடையதெல்லாம் படிச்சதில்லை என்பதற்காகத்தான் சொன்னேன்.

      //Actually தனக்கு பக்தி மார்க்கம் , ஞான மார்க்கம் , கர்மமார்க்கம் எதுவும் தெரியாது உன் பாதங்களை பூரணமாக சரண் அடைவதை தவிர என்று அடுத்தடுத்த verses களில் வரும் அதை தான் mean பண்ணி இருந்தேன்.//

      இப்படித்தான் நானும் புரிந்து கொண்டேன். அதனால்தான் மகிழ்ச்சியும் தெரிவித்தேன் :) நன்றி ஷைலன்.

      Delete
    4. " நீலகண்ட தீட்சிதர் பற்றிச் சொன்னீங்க இல்லையா? நான் அவருடையதெல்லாம் படிச்சதில்லை"

      ஆச்சரியமா இருக்கு அக்கா நீங்க நீலகண்ட தீட்ஸ்தரின் ஆனந்த சாகரஸ்த்வம் படிச்சதில்லை என்பது. Time இருக்கிறப்போ இங்கே click பண்ணி படிச்சு பாருங்கோ . tamil அண்ட் English translation available. Vrey old book's scanned copy. not clear in some places. I think there are 108 slogas. சில இடங்களில் அம்மாகிட்ட ரெம்ப டிமாண்ட் பண்ணி
      பாடி இருப்பார். நெஞ்சை உருக்குவதும் கூட. Time இருக்கிறப்போ படிச்சிட்டு எப்பிடினு மறக்காம feedback போட்டிடுங்க!

      Delete