அம்மன்துதி பாடிடுவோம் .
தெம்மாங்குத் தேனிசையில்
அம்மன் துதி பாடிடுவோம் .
சிம்மவாகினி வருவாள்
நம்மநலம் காத்தருள்வாள் .
ஆத்தாளாம் அபிராமி
பார்த்தாலே போதுமடி!
பூத்திடுமே புதுவாழ்வு !
தோத்தோடும் தரித்திரமே !
தெம்மாங்குத் தேனிசையில்
அம்மன் துதி பாடிடுவோம் .
சிம்மவாகினி வருவாள்
நம்மநலம் காத்தருள்வாள் .
நாத்திகரை ஆத்திகராய்
மாத்திடுவாள் மகமாயி !
காத்திடுவாள் , நம்மைக்கரை
சேர்த்திடுவாள் காத்தாயி !
தெம்மாங்குத் தேனிசையில்
அம்மன் துதி பாடிடுவோம் .
சிம்மவாகினி வருவாள்
நம்மநலம் காத்தருள்வாள் .
அன்பு மகள் கவிநயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇது உங்கள் அன்பு மகளின் பிறந்தநாளையிட்டு எழுதிய பாடலா ?..
ReplyDeleteஅருமையாக உள்ளது .நாங்களும் உங்கள் செல்ல மகளை
நீடுழி வாழ வாழ்த்துகின்றோம் .மிக்க நன்றி தோழி பகிர்வுக்கு .
லலிதாம்மா, with your permission, lemme extend your song a bit!
ReplyDeleteதெம்மாங்குத் தேனிசையில்
அம்மன் துதி பாடிடுவாள்
செம்மாங்குத் தமிழ்க் கவிஞர்
கவிநயா என்று ஒருவள்!
அவளுக்கு உலகன்னை
தலை வாரிப் பூச்சூட்டி
அமுதிட்டு அருளிட்டு
அரவணைப்பாள் இந்நாளில்!
அன்னாள் பிறந்தநாள் அன்னையின் சிறந்தநாள்
அந்நாள் இந்நாளென்(று) உணர்!
------
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்-க்கா!:)
from ravi & ragavan
அழகான வரிகள் !
ReplyDeleteநன்றி லலிதா அம்மா.
அம்மாவை அழகு தமிழில் பாடும் செல்லக்குழந்தை கவிநயா அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
ReplyDeleteஆஹா, பார்த்ததும் இனித்தது. மிக்க நன்றி லலிதாம்மா. கூடவே அழகாகப் பாடி வாழ்த்தியதற்கு மிக்க நன்றி கண்ணா. தனபாலன், அம்பாளடியாள், ஷைலன், அனைவரின் அன்பிற்கும் நன்றிகள் பலப் பல.
ReplyDelete