கரை இதுவே !
(subbu sir sings http://www.youtube.com/watchv=YyvaCODGQpI )
மாயைக் கடலிலென் மனக்கலம் நிலையின்றி
ஆடி அலையுதம்மா .
மதியோ திசைகாட்டியற்ற மாலுமியாய்
கரைதேடித் தவிக்குதம்மா.
புலன்களாம் முதலைகள் ஆசைப் பற்களால்
கலந்தனைத் துளைக்குதம்மா .
துளைவழி புகுந்த மாயை நீர் கலந்தனை
மூழ்க்கிட முயலுதம்மா.
உள்ள இடமெது என்று உணருமுன்
இருள்வந்து சூழ்ந்ததம்மா.
செல்லுந்திசை புரியாத மதியோ
கரைதேடிச் சோர்ந்ததம்மா.
கலங்கரை விளக்கமாம் கண்களால் கருணையாம்
ஒளிதனைப் பாய்ச்சிடம்மா !.
கலங்கிடும் மதிக்கு " கரை இதுவே! " என்றுன்
மலர்க்கழல் காட்டிடம்மா !
பேரருட்காற்றாலென் மனக்கலந்தன்னையுன்
திசையினில் திருப்பிடம்மா.!
பாசத்தாலதனைக் கட்டியுன் திருக்கழற்
கரைதனில் நிறுத்திடம்மா!
கரை இதுதான்! அழகான பாடல்.
ReplyDelete(video private - அப்படின்னு வருது...)
மாயையைக் கடலாகவும், மனத்தினைக் கலமாகவும் உருவகிக்கும் பாடல் அருமை!!!. மிக நல்லதொரு பகிர்விற்கு மிக்க நன்றி.
ReplyDelete