Monday, August 19, 2013

மனசெல்லாம் மணக்குதடி!

கற்பூர நாயகியே கனகவல்லி மெட்டில்...

மனசெல்லாம் மணக்குதடி மாரியம்மா
மாயி உன் பேரைச் சொன்னா மாரியம்மா
தரிசெல்லாம் பரிசாகும் மாரியம்மா, நீ
கரிசனமாப் பார்த்துப்புட்டா மாரியம்மா!

சிந்தூரப் பொட்டொளிரும் சிவகாமி
சித்தமெல்லாம் நிறைந்திருக்கும் அபிராமி
சமயத்திலே காப்பவளே சமயபுரத்தா
துயரமெல்லாம் தீர்ப்பவளே தெப்பக்குளத்தா!

பச்சை வண்ணப் பைங்கிளியே மீனாக்ஷி
பார்வையிலே ஆள்பவளே காமாக்ஷி
காசியிலே குடியிருக்கும் விசாலாக்ஷி
காசினி யெல்லாம்அம்மா உனதாட்சி!

காளியான உருவினிலும் கருணைத் தாயடி
சூலிநீலி வாராகி யாவும் நீயடி
வேலியாகிப் பிள்ளைகளைக் காக்கும் தாயடி
வேதனைகள் வேரறுக்கும் வீரி நீயடி!

எண்ணமெல்லாம் நீயாக ஆகிட வேண்டும்
வாக்கினிலே உன் பெயரே ஒலித்திட வேண்டும்
செய்வதெல்லாம் உனக்கென்றே செய்திட வேண்டும்
வாழும் வாழ்க்கை உனக்கென்றே ஆகிட வேண்டும்!

உன்னைஎண்ணும் போதேமனம் உருகிட வேண்டும்
உடலெல்லாம் மெய்புளகம் அரும்பிட வேண்டும்
விழியெல்லாம் ஆறாகப் பெருகிட வேண்டும்
வழியெல்லாம் உனைப்பற்றி நடந்திட வேண்டும்!


--கவிநயா

7 comments:

  1. பாடிப் பார்த்தேன்... அருமை... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன்!

      Delete
    2. பாடிப் பார்த்ததை ரெகார்ட் பண்ணி அனுப்புங்களேன்... இடுகையில் சேர்க்கலாம் :)

      Delete
  2. எண்ணமெல்லாம் நீயாக ஆகிட வேண்டும்
    வாக்கினிலே உன் பெயரே ஒலித்திட வேண்டும்
    செய்வதெல்லாம் உனக்கென்றே செய்திட வேண்டும்
    வாழும் வாழ்க்கை உனக்கென்றே ஆகிட வேண்டும்!

    நானும் அம்மாவிடம் வேண்டும் வரிகள்!

    நன்றி அக்கா!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி ஷைலன்! மிகவும் நன்றி.

      Delete
  3. sweeeeet song on my sweeeeeetest ammaa !
    wt hpnd to subbu sir's music ? ws patiently wting fr that !

    ReplyDelete
    Replies
    1. நன்றி அம்மா! சுப்பு தாத்தா, எல்லாருக்கும் தெரிஞ்ச மெட்டுதானேன்னு பாடலையா இல்லை பிசியான்னு தெரியலை.

      Delete