மனதினில் வரும் முகம்
மங்கையின் திரு முகம்
நிலவென ஒளிர் முகம்
நிம்மதி தரும் முகம்!
அலைகளில் துரும்பென
அலைகின்ற போதினில்
கைகளில் எனை யள்ளிக்
காப்பவ ளின் முகம்!
மலையன்ன துயரத்தில்
மலைக்கின்ற போதினில்
மலையினைத் துகளெனத்
தகர்ப்பவ ளின் முகம்!
சிலையெனும் வடிவிலும்
சிரிக்கின்ற அவள் முகம்
சிந்தையுள்ளே என்றும்
நிலைத்திட்ட எழில் முகம்!
--கவிநயா
நிம்மதி தரும் முகம்!
ReplyDeleteஅழகான பாடல் வரிகள்..
பாராட்டுக்கள்..
நன்றி அம்மா!
Deleteநின்மதி தரும் முகங்களின் அணிவகுப்பு மிகவும் அருமையாக இருந்தது .
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழி .
நன்றி அம்பாளடியாள்.
Delete" மலையன்ன துயரத்தில்
ReplyDeleteமலைக்கின்ற போதினில்
மலையினைத் துகளெனத்
தகர்ப்பவ ளின் முகம்! "
அழகான வரிகள்
நன்றி அக்கா!
எனக்கும் பிடித்த வரிகள். நன்றி ஷைலன்!
DeleteActually I commented on your previous post one before the last one. I think you missed it. I m just sharing the Neelakanda Thtchithar's Anantha Sagarasthvam with you since you said you dont get the chance to read one.
ReplyDeleteபார்த்துட்டேன் தம்பி. வாசிச்ச பிறகு எழுதலாம்னு இருந்தேன்... இன்னுமே வாசிக்கலை :( சுட்டிக்கு ரொம்ப நன்றிப்பா.
Delete