Monday, June 23, 2014

மனமெல்லாம் நீயே வேண்டும்!



சுப்பு தாத்தா பாடியதை இங்கே கேட்டு மகிழலாம்! மிக்க நன்றி தாத்தா!

நானென்னும் அகந்தையாலே
நசிந்தவர்கள் பலப்பல கோடி!
நானதிலே வேண்டா மென்றே
நவிலுகின்றேன் உன்னை நாடி!

கானன்ன என்றன் வாழ்வில்
கதிரொளியாய் நீயே வேண்டும்!
மானன்ன உன்றன் விழிகள்
மக்கள்தமைப் பேணிடல் வேண்டும்!

தேனன்ன உன்றன் நாமம்
தினமும் நான் செப்பிடல் வேண்டும்!
வானன்ன விரிந்த என்னன்பில்
விரும்பிநீ திளைத்திடல் வேண்டும்!

கணமொன்றும் தவறாமல் நான்
உனையேதான் நினைத்திடல் வேண்டும்!
மனமெல்லாம் அம்மா நீயே
நிறைந்தென்னுள் நிலைத்திடல் வேண்டும்!


--கவிநயா

5 comments:

  1. முதல் நான்கு வரிகளும் சிறப்பு....!

    ReplyDelete
  2. எல்லா வரிகளுமே ரெம்ப நல்ல இருக்கு
    except "மங்கைதனைப் பேணிடல் வேண்டும் "
    பரவாயில்லை அம்மாவை இவ்வளவு அழகாக பாடியதால மன்னிச்சு விட்டுறன்
    நன்றி அக்கா!

    ReplyDelete
    Replies
    1. தம்பிக்காக மாத்திட்டேன்! நன்றி ஷைலன் :)

      Delete
  3. ரெம்ம்ப நன்றிக்கா

    ReplyDelete