Monday, June 9, 2014

மனங் குளிர்வாய்!


சுப்பு தாத்தா அடானாவில் அருமையாகப் பாடியிருப்பதைக் கேட்டு மகிழுங்கள். மிக்க நன்றி தாத்தா!



மனங் குளிர்வாய் மகிழ்வாய் மரகத மாமணியே
மழுவினை ஏந்துகின்ற மன்னவனின் மனையே!
(மனங்)

கண்ணுதலான் காதல் கனியமுதே களியே
வண்டுவிழி மாதே வாஞ்சைமிகு வனிதே!
(மனங்)

பச்சை மயிலாக வந்து பரமனை பூசித்தாய்
நித்தம் அவனை நினைந்து நித்திலமே நேசித்தாய்
ஊசி முனையில் நின்று அவனன்பை யாசித்தாய்
பேசும் மலர்ப் பாதனுடன் ஏழுலகும் போஷித்தாய்!
(மனங்)


--கவிநயா 

படத்துக்கு நன்றி: http://sam.aminus3.com/image/2012-07-25.html


2 comments:

  1. // பேசும் மலர்ப் பாதனுடன் ஏழுலகும் போஷித்தாய்! //

    அழஹான வரிகள் !
    நன்றி அக்கா!

    ReplyDelete