Monday, June 2, 2014

உன்னை விட்டால் எவருண்டு எனக்கு?


சுப்பு தாத்தா ஆனந்த பைரவியில் அனுபவித்துப் பாடியிருப்பதை நீங்களும் கேட்டு அனுபவியுங்கள்! மிக்க நன்றி தாத்தா!



உன்னை விட்டால் எவருண்டு எனக்கு? என்னைக்
காப்பாற்றுதல் உந்தன் பொறுப்பு…
(உன்னை)

உந்தன் திருப் பாதங்கள் கருத்தினிலே பதித்தேன்
பதமலர் தனையன்றி மற்றதெல்லாம் வெறுத்தேன்!
விதி என்ன விதி என்று தள்ளி வைத்தேன், பொறுத்தேன்
நீயே என் கதியென்று உன்னை இறுக்கிப் பிடித்தேன்!
(உன்னை)

பற்றிக் கொண்டேன் உந்தன் பஞ்சுமலர்ப் பாதம்
சுற்றிக் கொண்டேன் கொடியாய், வெட்டிடுதல் பாவம்!
கொட்டும் உன் அருள் மழையில் நனைவதுவே யோகம்
சற்று நீ அருகில் வந்தால் விலகிடும் என் சோகம்!

(உன்னை)


--கவிநயா

4 comments:

  1. கனகதுர்க்கை படம்தானே..

    பற்றிக் கொண்டேன் உந்தன் பஞ்சுமலர்ப் பாதம்
    சுற்றிக் கொண்டேன் கொடியாய்,

    அன்புடன்
    திவாகர்

    ReplyDelete
    Replies
    1. கனக துர்க்காதான்.
      மிக்க நன்றி திவாகர் ஜி.

      Delete
  2. //உந்தன் திருப் பாதங்கள் கருத்தினிலே பதித்தேன்
    பதமலர் தனையன்றி மற்றதெல்லாம் வெறுத்தேன்!
    விதி என்ன விதி என்று தள்ளி வைத்தேன், பொறுத்தேன்
    நீயே என் கதியென்று உன்னை இறுக்கிப் பிடித்தேன்!//
    நானும் தான் அம்மா !
    அழஹான வரிகள் !
    நன்றி அக்கா!

    ReplyDelete
    Replies
    1. எனக்குமே பிடித்த வரிகள் ஷைலன். மிக்க நன்றிப்பா.

      Delete