Monday, August 11, 2014

கதிராய் வருவாய்!




சுப்பு தாத்தா அருமையாகப் பாடியிருப்பது இங்கே... மிக்க நன்றி தாத்தா!


அலை பாயும் என் மனதில்
நிலையாக நீ வருவாய்
உலையிட்ட சோறானேன்
உமையாளே நீ அருள்வாய்

மலையாக உனை நம்பி
விலையாய் என்னுயிர் ஈந்தேன்
சிலையாக நில்லாமல்
சிவையே நீ அருள்வாயே

வலையிட்ட மீனாக
வலிபட்டுத் தவிக்கின்றேன்
சிலைதாங்கும் கரத்தாளே
எனைத் தாங்கலாகாதோ?

பனி பூத்த மலையின் மேல்
பதியோடு உறைபவளே
மதி பூத்த பனி விலக்கக்
கதிராக வாராயோ?


--கவிநயா

No comments:

Post a Comment