கிராமத்து மெட்டில் சுப்பு தாத்தா பாடி அசத்தியிருப்பது இங்கே... மிக்க நன்றி தாத்தா!
ஆடியிலே கூழு காச்சி
அம்மனுக்குப் படைச்சாக்க
ஆடியிலே கூழு காச்சி
தேடி வந்திடுவா
தேவையெல்லாம் தீர்த்திடுவா!
வளைஞ்சு கும்பிட்டா
கொழைஞ்சு போயிடுவா
கொழந்தை மனசிருந்தா
கொஞ்சிப் பேசிடுவா!
வேண்டிய வரமெல்லாம்
வேண்டாமயே தருவா
தாளாத துன்பத்தையும்
தொரத்தி அடிச்சிடுவா!
ஆத்தான்னு சொல்லிப்புட்டா
அபயந் தந்திடுவா
அள்ளி அணைச்சிடுவா
அன்பைப் பொழிஞ்சிடுவா!
அவளப் போல இந்த
ஒலகத்தில்
யாருமில்ல
அவள நெனச்சிருந்தா
கவல எதுவுமில்ல!
நெனப்புல இருக்குறவ
வாக்குல வந்திடுவா
வாக்குல வந்துபுட்டா
வாழ்க்கையிலும் வருவா!
--கவிநயா
No comments:
Post a Comment