தில்லை நாதனுடன் திகழ்ந்திடும் சிவகாமி
திருக்கடவூரினிலே அவள் பெயர் அபிராமி
(தில்லை)
தத்தோம் தத்தோம் என்று நடமிடும் சிவசாமி
தந்தோம் தந்தோம் என்று அவனுடன் அருள்வாமி
(தில்லை)
மலயத்துவசன் மகள் மதுரையில் மீனாக்ஷி
கடைவிழியால் காப்பாள் காஞ்சியின் காமாக்ஷி
கதிமோக்ஷம் தருவாள் காசி விசாலாக்ஷி
கள்ளமில்லா உள்ளங்களில் அனுதினம் அவள் ஆட்சி
(தில்லை)
--கவிநயா
கள்ளமில்லா உள்ளங்களில் அனுதினம் அவள் ஆட்சி....
ReplyDeleteஆஹா மிக சிறப்பு
நல்வரவு அனுராதா ப்ரேம்குமார். வாசித்தமைக்கு மிக்க நன்றி!
Deleteஆசைகளை ஆட்சி செய்யும் காமாட்சி .. என்மனதும் உள்ளுணர்வும் அதற்கு சாட்சி. கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .
ReplyDelete