சன்னலுக்கு நடுவினில் வந்த நிலவே
உன்னிடத்தில் ஒன்று நான் சொல்ல வேண்டும், என்
அன்னையிடம் நீதான் தூது செல்ல வேண்டும்
(சன்னலுக்கு)
உன்றன் முகம் காணுகையில் செல்ல மதியே, என்றன்
அன்னை முகமே தோணும் சொல்லு மதியே
சின்னப் பிறை பார்க்கும் போதும் செல்ல மதியே,
என்றன்
அன்னை முடிப் பிறை தோணும் சொல்லு மதியே
(சன்னலுக்கு)
சித்திரம் போல் நீ சிரித்தால் செல்ல மதியே,
என்றன்
அன்னை சிரிப்பெழில் தோணும் செல்ல மதியே
நித்திலம் போல் நீ ஜொலிக்க செல்ல மதியே, அவள்
மூக்குத்தியின் ஒளி தோணும் செல்ல மதியே
(சன்னலுக்கு)
காணுகின்ற திசை தோறும் செல்ல மதியே
தோணுவது அவள் முகம் சொல்லு மதியே
கூனற் பிறை மாதிடத்தில் செல்ல மதியே
வேகங் கொண்டு வரச் சொல்லிச் சொல்லு மதியே
(சன்னலுக்கு)
--கவிநயா
No comments:
Post a Comment