"மாரியம்மன் தாலாட்டு" -- 1
வெகு நாட்களாக எனது நண்பர் திரு. நாமக்கல் சிபி என்னைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு தோத்திரப்பாடலை,
தமிழகத்திலுள்ள அனைத்து இந்துக்களாலும் போற்றி வணங்கப்படும் ஒரு தெய்வத்தைப் போற்றிப் பாடும் தோத்திரப்பாடலை,
தமிழ் தெரிந்த அனைவராலும் இயல்பாக மனமொன்றிப் பாடக்கூடிய ஒரு தோத்திரப்பாடலை,
படித்தவர் முதல்,பாமரர் வரை அனைவராலும் விரும்பிப் பாடப்படும் ஒரு தோத்திரப்பாடலை,
நம்பிக்கையோடு படித்தவர்க்கும், கேட்டவர்க்கும் பலவித நன்மைகளை அளிக்கும் வல்லமை படைத்த ஒரு தோத்திரப்பாடலை,
விளக்கம் எதுவும் இல்லாமலேயே எளிதாய் புரியக்கூடிய ஒரு தோத்திரப்பாடலை,
ஆடி மாதம் வந்தாலே, இறை நம்பிக்கை கொண்ட அனைத்துத் தமிழரும் தவறாது செல்லும் ஒரு திருத்தெய்வத்தின் தோத்திரப்பாடலை,
இன்று தொடங்கி சிறு சிறு பகுதிகளாக தினந்தோறும் இங்கே வழங்க,
எல்லாம் வல்ல பிள்ளையாரையும், எனையாளும் முருகனையும், அந்த மஹாசக்தியையும் வணங்கித் துதித்து,
"எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்துவரும் மாரியம்மன் தாலாட்டு"
எனும் திருத்தோத்திரத்தை நாளை முதல் பதிய எண்ணியிருக்கிறேன்.
கிட்டத்தட்ட 700 வரிகளுக்கும் மேற்பட்ட இத்தோத்திரத்தை நாளொன்றுக்கு 30 வரிகள் என பதிக்க நினைக்கிறேன்.
ஆடி மாதத் தொடக்கத்தில், அவள் அருளால், அனைவர் கையிலும் முழு நூலும் கிட்டிவிடும் என நம்புகிறேன்
இதற்கு விளக்கம் எதுவும் தேவையில்லை எனக் கருதுவதால், சொல்ல நினைப்பதை முதல், கடைசி பதிவுகளில் மட்டுமே சொல்லுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
எனக்குத்தோன்றும் இடங்களில் அருஞ்சொற்பொருள் தேவையெனப் பட்டால் இடுகிறேன்.
உங்களுக்கு வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமானாலும் தயங்காது கேட்கவும். ......தெரிந்த வரையில் சொல்லுகிறேன்.
இதனை ஒட்டி நான் எழுதிய ஒரு சிறு பாவுடன் இதனைத் துவக்குகிறேன்.
நாளை முதல் வருவது மூலநூல்.
இயற்றியவர் யாரெனக் குறிப்பிடவில்லை.
அனைவருக்கும் மாரியம்மன் அருள் கிட்ட வேண்டுகிறேன்.
ஓம் சக்தி மாரியம்மன் துணை.
*********************************************************************

ஓம் கணபதி துணை
ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை
'எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்'
ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை
'எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்'
"மாரியம்மன் தாலாட்டு"
எண்ணியவர்க்கு எண்ணியதெலாம் தரும்,
திண்ணிய மனமுடையோர் தினமுமோதும்
கண் கொடுக்கும் சமயபுரம் மாரியம்மன்
பண்ணிதைப் பாடிட பண்ணிய பாவம் போகுமே!
[இது ஒரு எளிய பக்தன் தன் தாயை அழைத்து, தன் மனதில் தோன்றுகின்ற அத்தனை உணர்வுகளையும்,
மனம் போன போக்கில், இஷ்டப்படி சொல்லிக்கொண்டு போகும் ஒரு துதிப்பாடல்!
இலக்கணம் இதில் பார்க்க வேண்டாம்!
விளக்கமும் தேவையிருக்காது!
அப்படியே ரசியுங்கள்!
அன்னையைத் துதியுங்கள்!]
ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை
ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை
வாக்குத் தவறாது வழங்கி விட்டீர்கள் வீயெஸ்கே!
ReplyDeleteமிக்க நன்றி!
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇசை வடிவிலும் மாரியம்மன் தாலாட்டுப் பாடல்
ReplyDeleteகொடுக்க முடியுமா ஐயா?
நன்றி.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteபதிவுடன் இணந்த படத்தில் அம்மன் கால்கள் காணாததைக் கண்டு அக்கறையோடு காலைக் காட்டச் சொன்ன கோவியாரின் பின்னூட்டம் எதிர்பாராவசமாக அகற்றப்பட்டது குறித்து வருந்துகிறேன்.
ReplyDeleteஎன் கணினி அறிவுக்கு மேலும் ஒரு சான்று இது!! :(
படம் கூட அப்படியே!.
ஏதோ ஒரு கிடைத்த ஆடியோ சி.டி. கவரின் முகப்புப் படத்தை அப்படியே இட்டேன்.
அதிலேயே இல்லாத ஒன்றுக்கு நான் என்ன செய்ய முடியும்.
இருப்பினும், மடித்து வைத்த இடது கால் தெரிகிறது என்னும் மகிழ்ச்சியான செய்தியை கோவியாருடன் பகிர்கிறேன்! :))
முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட கதைதான்,நான் படம் பதிய எண்ணுவதும் எனப் புரிவதால், இனி அதில் அதிக முயற்சி எடுக்க மாட்டேன் என உறுதி கூறுகிறேன்!
என் வேண்டுகோளுக்கிணங்கி ஒரு சில அழகிய அம்மன் படங்களை அனுப்பி வைத்த கோவியாருக்கு நன்றி.
வந்து வாழ்த்திய சிபியாருக்கும் நன்றி.
இசை வடிவில் நான் இதை இதுவரை கேட்டதில்லை என்பதை அனானியாருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிடைத்தால் இடுகிறேன்.
இனி அம்மன் அருளில் திளைப்போம்.
கருமாரியம்மன் தாலாட்டை கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த தாலாட்டை இடவிருக்கும் வி எஸ் கே அய்யாவிற்கும், இதை இடச்சொன்ன சிபியாருக்கும் என் நன்றி.
ReplyDelete//வந்து வாழ்த்திய சிபியாருக்கும் நன்றி//
ReplyDeleteஎனக்காக பதிவை போட்டிருக்கீங்க!
நான் வராம இருப்பனா!
எல்லாம் ஒரு குருப்பாய் தான் அலையறாங்கப்பா ... கூழ் ஊத்தவும் கிளம்பிடாங்கப்பா ... எஸ்.கே வி.எஸ்.கே ஆன பொறவும் அப்படியே நெருப்பு சட்டி , வேப்பிலை சட்டினு தான் திரியறார்.
ReplyDelete//தமிழகத்திலுள்ள அனைத்து இந்துக்களாலும் போற்றி வணங்கப்படும் ஒரு தெய்வத்தைப் போற்றிப் பாடும் தோத்திரப்பாடலை,
தமிழ் தெரிந்த அனைவராலும் இயல்பாக மனமொன்றிப் பாடக்கூடிய ஒரு தோத்திரப்பாடலை,
படித்தவர் முதல்,பாமரர் வரை அனைவராலும் விரும்பிப் பாடப்படும் ஒரு தோத்திரப்பாடலை,//
நான் ஒரு இந்து , தமிழ் எனக்கு நல்லா தெரியும்(என்னை விட யாருக்கு தெரியும் தமிழ் என்று கேட்கும் அளவு தலை செறுக்கு கூட உண்டு)
சுமாரா எழுதப்படிக்க தெறியும் அப்பரம் எப்படி என்னையும் சேர்த்து மனம் விரும்பி பாடப்படும் தோத்திரப் பாடல்னு போட்டிங்க எஸ்.கே. எனக்கு பின்னாடி மூனே முக்கா கோடி தமிழர்கள் இருக்காங்க (பகுத்தறிவுடையவர்களை மட்டும் சொல்கிறேன்)
வலைப்பதிவில் அக்னி குண்டம் இறங்கும் திட்டம் எதுவும் இல்லையா :-))