Wednesday, June 27, 2007

"மாரியம்மன் தாலாட்டு" -- 10 [213-240]


"மாரியம்மன் தாலாட்டு" -- 10 [213-240]


ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை

எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்


"மாரியம்மன் தாலாட்டு"


[வரிகள் 213-240]


அடங்காத மானிடரை அடிமைபலி கொண்டசக்தி


மிஞ்சிவரும் ராட்சதரை வெட்டிவிரு துண்டகண்ணே


தஞ்சமென்ற மானிடரைத் தற்காக்கும் பராபரியே

அவரவர்கள் தான்பணிய வாக்கினையைப் பெற்றவளே

சிவனுடன் வாதாடும் சித்தாந்த மாரிமுத்தே

அரனுடன் வாதாடும் ஆஸ்தான மாரிமுத்தே

பிரமனுடன் வாதாடும் பெற்றவளே மாரிமுத்தே
விஷ்ணுவுடன் வாதாடும் வேதாந்த மாரிமுத்தே [220]



எமனுடன் வாதாடும் எக்கால தேவியரே

தேவருடன் வாதாடும் தேவிகன்ன னூராளே
கன்ன புரத்தாளே காரண சவுந்தரியே

காரண சவுந்தரியே கர்த்தனிட தேவியரே

நெருப்பம்மா உன்சொரூபம் நிஷ்டூரக் காரியரே

அனலம்மா உன்சொரூபம் ஆஸ்தான மாரிமுத்தே

தணலம்மா உன்சொரூபம் தரிக்கமுடி போதாது

அண்டா நெருப்பேயம்மா ஆதிபர மேஸ்வரியே

காத்தானைப் பெற்றவளே கட்டழகி மாரிமுத்தே

தொட்டியத்துச் சின்னானைத் தொழுதுவர பண்ணசக்தி [230]



கருப்பனையுங் கூடவேதான் கண்டு பணியவைத்தாய்
பெண்ணரசிக்காகப் பிள்ளையைக் கழுவில் வைத்தாய்
அடங்காத பிள்ளையென ஆண்டவனைக் கழுவில் வைத்தாய்

துஷ்டனென்று சொல்லி துடுக்கடக்கிக் கழுவில் வைத்தாய்

பாரினில் முத்தையம்மா பத்தினியே தாயாரே

வாரி யெடுக்கவொரு வஞ்சியரை யுண்டுபண்ணாய்

முத்தெடுக்குந் தாதி மோகனப் பெண்ணேயென்று

தாதியரைத் தானழைத்துத் தாயாரே முத்தெடுப்பாய்

முத்தெடுத்துத் தான்புகுந்து உத்தமியாள் மாரிமுத்தே

மாயி மகமாயி மணிமந்திர சேகரியே [240]
[இன்னும் வரும்]

2 comments:

  1. //அடங்காத மானிடரை அடிமைபலி கொண்டசக்தி
    மிஞ்சிவரும் ராட்சதரை வெட்டிவிரு துண்டகண்ணே
    தஞ்சமென்ற மானிடரைத் தற்காக்கும் பராபரியே
    அவரவர்கள் தான்பணிய வாக்கினையைப் பெற்றவளே//

    அம்பாளை கும்பிட வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வர, நாம் முன் ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காக்கும் தாயவள் கருமாரியே.

    ReplyDelete
  2. அக்ஷர உண்மையதை அப்படியே சொல்லிவிட்ட என் அன்புத்தோழிக்கு வணக்கம்..

    ReplyDelete