Wednesday, June 20, 2007

"மாரியம்மன் தாலாட்டு" -- 3

"மாரியம்மன் தாலாட்டு" -- 3

ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை

எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்

"மாரியம்மன் தாலாட்டு"


[கிராமங்களில் இன்று நாமெல்லோரும் காணும் ஒரு காட்சி, தூளி!
தன் புடவையால் கட்டிய தூளியில் குழந்தையை இட்டு, தனக்கு வலப்புறமும், இடப்புறமுமாக ஒரு ராகம் பாடிக்கொண்டே தாய் ஆட்டுவாள்.
அதே போல ஒவ்வொரு வரியையும் இரண்டாகப் பிரித்து ஒரு தாலாட்டு பாடுவது போல இதைப் படித்துப் பாருங்கள்! இன்புறுங்கள்!]

" மாரியம்மன் துதி"

"மாயி மகமாயி மணிமந்திர சேகரியே

ஆயிவுமை யானவளே ஆதிசிவன் தேவியரே

மாரித்தாய் வல்லவியே மகராசி காருமம்மா

மாயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா

ஆயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா

தாயே துரந்தரியே ஆஸ்தான மாரிமுத்தே

திக்கெல்லாம் போற்றும் எக்கால தேவியரே

எக்கால தேவியரே திக்கெல்லாம் நின்ற சக்தி

கன்ன புரத்தாளே காரண சவுந்தரியே

காரண சவுந்தரியே நாரணனார் தங்கையம்மா [10]

நாரணனார் தங்கையம்மா நல்லமுத்து மாரியரே

உன் கரகம் பிறந்ததம்மா கன்னனூர் மேடையிலே

உன் வேம்பு பிறந்ததம்மா விஜயநகர் பட்டணமாம்

உன் சூலம் பிறந்ததம்மா துலங்குமணி மண்டபத்தில்

உன் அலகு பிறந்ததம்மா அயோத்திநகர் பட்டணமாம்

உன் பிரம்பு பிறந்ததம்மா பிச்சாண்டி சந்நிதியாம்

உன் உடுக்கை பிறந்ததம்மா உத்திராட்ச பூமியிலே

உன் பம்பை பிறந்ததம்மா பளிங்குமா மண்டபத்தில்

உன் கருத்து பிறந்ததம்மா கஞ்சகிரி இந்திரபுரம்

உன் அருளர் தழைக்கவம்மா வையங்கள் ஈடேற [20]

உன் குமாரவர்க்கந் தான்றழைக்க கொம்பனையே மாரிமுத்தே

உனக்கு மூன்று கரகமம்மா முத்தான நற்கரகம்

உனக்கு ஐந்து கரகமம்மா அசைந்தாடும் பொற்கரகம்

உனக்கு ஏழு கரகமம்மா எடுத்தாடும் பொற்கரகம்

உனக்கு பத்து கரகமம்மா பதிந்தாடும் பொற்கரகம்

வேப்பிலையும் பொற்கரகம் வீதிவிளை யாடிவர

ஆயிரங் கண்ணுடையாள் அலங்காரி வாருமம்மா

பதினாயிரங் கண்ணுடையாள் பராசக்தி வாருமம்மா

துலுக்காணத் தெல்லையெல்லாம் குலுக்காடப் பெண்பிறந்தாய்

துலுக்காணத் தெல்லைவிட்டு துரந்தரியே வாருமம்மா [30]


[ஒவ்வொரு வரியையும் மனதில் பதிந்து ஊன்றிப் படிக்க வேண்டியே, சிறு பகுதிகளாக வெளியிடுகிறேன்.]




9 comments:

  1. //உன் கரகம் பிறந்ததம்மா கன்னனூர் மேடையிலே
    உன் வேம்பு பிறந்ததம்மா விஜயநகர் பட்டணமாம்
    உன் சூலம் பிறந்ததம்மா துலங்குமணி மண்டபத்தில்
    உன் அலகு பிறந்ததம்மா அயோத்திநகர் பட்டணமாம்
    உன் பிரம்பு பிறந்ததம்மா பிச்சாண்டி சந்நிதியாம்
    உன் உடுக்கை பிறந்ததம்மா உத்திராட்ச பூமியிலே
    உன் பம்பை பிறந்ததம்மா பளிங்குமா மண்டபத்தில்
    உன் கருத்து பிறந்ததம்மா கஞ்சகிரி இந்திரபுரம்
    உன் அருளர் தழைக்கவம்மா வையங்கள் ஈடேற//

    ஒவ்வொன்றையும் அழகாக வர்னித்திருக்கிறார் ஆசிரியர். கருமாரியின் அழகை எவ்வளவு தான் வர்னித்தாலும் அதன் சிறப்பு அடங்காது.

    ReplyDelete
  2. முதல் வரியில் இருந்தே நம் மனத்தை அள்ளிச் செல்லும் பாமாலை இது.

    ஒவ்வொரு வரியும், எளிமையாக இருப்பது போல் தோன்றினாலும், பல உயரிய கருத்துகளை உள்ளடக்கியது.

    சரியாக அதைத் தொட்டுக் காண்பித்திருக்கிறீர்கள், அன்புத்தோழி!

    ReplyDelete
  3. படிக்க படிக்க மனதை அள்ளுகிறது!

    இது பண்டிகைக் காலங்களில் எங்க ஊர் கோவில் ஒலிபெருக்கியில் கேட்டது நினைவிற்கு வருகிறது!

    மிக்க நன்றி!

    ReplyDelete
  4. ஆதிபராசக்தி திரைப்படத்தில் P.சுசிலா பாடிய இந்த பாடல் மெய்சிலிர்க்க வைக்கும்.

    பாடலுக்கு நடனமாடியிருப்பவர் நாட்டியப் பேரொளி பத்மினி.

    இப்பின்னூட்டமிடும்போது

    கண்களில் அக்காட்சியும்
    கருத்தில் அக்கவிதையும்
    எண்ணத்தில் விரவிநிற்க
    என்மெய்யும் சிலிர்த்ததைய்யா!

    (என்ன தவம் செய்தேனோ! P.சுசிலா வாழும் காலத்திலேயே நானும் பிறந்து வாழ்கிறேன்.)

    ReplyDelete
  5. முடிந்தால் விக்கிமூலதில் சேர்த்துவிடுஙள்

    http://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

    நன்றி!

    ReplyDelete
  6. சமயத்தில் வந்து காப்பாற்றும் அன்னையின் தாலாட்டுப்பாடல் மனதை உருக்குகிறது நன்றி விஎஸ்கே!
    ஷைலஜா

    ReplyDelete
  7. இந்தப் பாடலை இங்கே 156வது பாடலை சொடுக்கி ரியல் பிளேயரில் கேளுங்கள்.

    ReplyDelete
  8. முதல் இரு வரிகளை ஏற்கனவே கேட்டது போல் இருக்கிறது எஸ்.கே.

    நீங்கள் சொன்னது போல் தாலாட்டாகப் பாடிப் பார்த்தேன். மிக நன்றாக இருந்தது.

    ReplyDelete
  9. இதன் பொருளோடு நீங்கள் எழுதியவற்றின் பிடிஎஃப் எனக்குத் தேவை டாக்டர். நன்றி. தேடினேன். கிடைக்கலை.

    ReplyDelete