Monday, September 8, 2008

வேண்டுவது ஏதுமில்லை அம்மா...!


வேண்டுவது ஏதுமில்லை அம்மா
உன்னிடத்தில்
வேண்டுவது ஏதுமில்லை அம்மா

உந்தன்திரு வடிகளிலே
அகலாத அன்பையன்றி
வேண்டுவது ஏதுமில்லை அம்மா

வெண்தா மரையின் மேலே
வீற்றிருக்கும் வெண் மதியே
வேண்டும் வரம் யாவையுமே
அள்ளித் தருவாய் என்றாலும்
வேண்டுவது ஏதுமில்லை அம்மா

செந்தா மரையின் மேலே
சிரிக்கின்ற பெண் மயிலே
அன்னையாக நீ இருந்து
அன்பை அள்ளித் தருகையிலே
வேண்டுவது ஏதுமில்லை அம்மா

சிம்மத்தின் மீ தமர்ந்து
சூரியனாய் ஜொலிப்ப வளே
சிந்தையி லே நிறைந்து
செந்தேனாய் இனிப் பவளே
வேண்டுவது ஏதுமில்லை அம்மா

உன்னிடத்தில்
வேண்டுவது ஏதுமில்லை அம்மா

உந்தன்திரு வடிகளிலே
அகலாத அன்பையன்றி
உன்னிடத்தில் வேண்டுவது ஏதுமில்லை…!

--கவிநயா

13 comments:

  1. //உந்தன்திரு வடிகளிலே
    அகலாத அன்பையன்றி
    உன்னிடத்தில் வேண்டுவது ஏதுமில்லை…!//

    உண்மை தான் கவிக்கா!
    குழந்தை என்ன வேண்டுவது அம்மாவிடம்?

    பால் வேணும், சக்கரை போட்டு வேணும், சூடா வேணும், வடிகட்டி ஏடில்லாமல் வேணும், ஏட்டோடு வேணும்-ன்னு கேட்டுக் கொண்டா இருக்கு குழந்தை?

    அன்பினால் அழுதால் தானாய்த் தர மாட்டாளா அன்னை?

    ReplyDelete
  2. அன்னையின் மீது கொண்டாத அசையாத நம்பிக்கையில், தனக்கு வேண்டுவனவற்றை அன்னையே வாரி வழங்குவாள் என்கிற நம்பிக்கையில்,'இது வேண்டும்- அது வேண்டும்' என்று அடம் பிடிக்காத குழந்தையாய், அவள் அன்பையன்றி வேறொன்றும் 'வேண்டுவது ஏதுமில்லை-அம்மா' என்று அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்..
    கவிதை அழகாக அமைந்திருக்கிறது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. //குழந்தை என்ன வேண்டுவது அம்மாவிடம்?//

    //அன்பினால் அழுதால் தானாய்த் தர மாட்டாளா அன்னை?//

    உண்மைதான் கண்ணா. கேட்காமலேயே எல்லாம் தருவாள் அன்னை :)

    Mother knows best! :)

    ReplyDelete
  4. ////உந்தன்திரு வடிகளிலே
    அகலாத அன்பையன்றி
    உன்னிடத்தில் வேண்டுவது ஏதுமில்லை…!//

    அகலாத அன்பே போதும். அரவணைத்துக் காத்திடுவாள் அன்னை. பின்னே வேண்டுவதற்கு ஏதுமில்லைதான். அருமையாகச் சொல்லி விட்டீர்கள் கவிநயா.

    ReplyDelete
  5. //உந்தன்திரு வடிகளிலே
    அகலாத அன்பையன்றி
    உன்னிடத்தில் வேண்டுவது ஏதுமில்லை…!//

    அன்னையின் ஒரு கடைக்கண் பார்வை போதுமே நாம் எல்லாம் பெற பின்னர் அவளிடம் ஏது வேண்ட என்று அருமையாக சொல்லியுள்ளீர்கள் கவிநயா.

    ReplyDelete
  6. நல்லாயிருக்குங்க கவிக்கா!!!

    ReplyDelete
  7. //அடம் பிடிக்காத குழந்தையாய்//

    சரியா சொன்னீங்க ஜீவி ஐயா. அவ எது குடுத்தாலும் அப்படியே ஏத்துக்கிட்டு, அவளுக்கேத்த நல்ல பிள்ளையா இருக்கதான் முயற்சி செய்யறேன் :)

    ReplyDelete
  8. சரியாகச் சொன்னீர்கள். மிக்க நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  9. உண்மைதான் கைலாஷி. மிக்க நன்றி!

    ReplyDelete
  10. வாசித்தமைக்கு மிக்க நன்றி மௌலி!

    ReplyDelete
  11. // கேட்காமலேயே எல்லாம் தருவாள் அன்னை :)//

    அவ்வாறு தருபவளே அன்னை!

    ReplyDelete
  12. சரியா சொன்னீங்க சிவமுருகன். வருகைக்கு நன்றி :)

    ReplyDelete
  13. தங்கள்
    பாடல் ஒன்று
    ராகங்கள் இரண்டு.
    ஸஹானா மற்றும் பகுதாரி

    வருக.
    http://ceebrospark.blogspot.com
    http://vazhvuneri.blogspot.com

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.

    ReplyDelete