Monday, September 15, 2008

பூமணம் உனக்கின்னும் வீசலையோ?


உன்னடிமை நானம்மா
ஏற்றுக் கொள்வாய் நீயம்மா
உந்தன் அன்புத் தளையினிலே
கட்டி வைப்பாய் எனையம்மா

ஆலயந் தோறும் குடி
இருப்பவளே - உன்னை
அண்டிய பேருக்கு
அருள்பவளே

பாலையைப் போலும் இந்த
உலகை விட்டு - பசும்
சோலையாம் உன்னடிகள்
தேடி வந்தேன் அம்மா

(உன்னடிமை)

உள்ளத்தில் உனக்கோர்
கோவில் வைத்தேன் - அம்மா
உனக்கென அதில்அன்பு
பூ வளர்த்தேன்

பூமணம் உனக் கின்னும்
வீசலையோ - எந்தன்
பாமணம் உன்னை யின்னும்
எட்டலயோ?


--கவிநயா

6 comments:

  1. //உந்தன் அன்புத் தளையினிலே
    கட்டி வைப்பாய் எனையம்மா//

    உங்கள் பாமணம் எட்டிடும் அவளடியினை. அப்படியே அணைத்து இழுத்திடுவாள் தன் அன்புத் தளையினில் கட்டிட!

    வாழ்த்துக்கள் கவிநயா!

    ReplyDelete
  2. //உன்னடிமை நானம்மா
    ஏற்றுக் கொள்வாய் நீயம்மா
    உந்தன் அன்புத் தளையினிலே
    கட்டி வைப்பாய் எனையம்மா//

    அதுதானே அன்னையிடம் வேண்டூவது.

    ஓம் சக்தி, ஓம் சக்தி.

    ReplyDelete
  3. எளிய நடை, அருமையான படம்...சூப்பருங்க..

    ReplyDelete
  4. வாங்க ராமலக்ஷ்மி. நீங்க சொன்னதை அவளே சொன்னதாக எடுத்துக்கறேன். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் :)

    ReplyDelete
  5. வேண்டுவதெல்லாம் அதேதான் கைலாஷி :) வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  6. வாங்க மௌலி. ரசித்தமைக்கு மிக்க நன்றி :)

    ReplyDelete