Monday, September 1, 2008

காடென்றால் வேற்காடு!

சமீப காலமாக நான் எழுதின பாடல்களையே படிச்சிக்கிட்டிருக்க உங்க மேல இரக்கப்பட்டு, ஒரு மாறுதலுக்காக பாடகி சித்ரா அவர்களோட "சர்வம் சக்தி மயம்" என்கிற தொகுப்பிலிருந்து "காடென்றால் வேற்காடு" என்கிற பாடலை தந்திருக்கேன் :)

அதன் ஒலி வடிவத்தை இங்கே கேட்கலாம்.


வேத நதி மூலமே வேதாந்த ரூபியே
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஆதி மதி மீதிலே நாத வடிவாகினை
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
சௌந்தர்ய லஹரி நீ சுந்தர ஜடாதரி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
எங்கெங்கு காணினும் தேவி உன் ரூபமே
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

காடென்றால் வேற்காடு
மரமென்றால் வேப்ப மரம்
ஊரென்றால் கொல்லூரு
உறவெல்லாம் உன்னோடு

சரணம் சரணம் தாயே சரணம்
வரணும் வரணும் அருளே தரணும்

மாங்காட்டு மீனாக்ஷி
மதுரையிலே மகமாயி
காஞ்சியிலே கருமாரி
தில்லையிலே கோலவிழி
சமயபுர காமாக்ஷி
மயிலையிலே ஸ்ரீகாளி
எப்படி நான் அழைத்தால் என்ன
நீதாண்டி என் தாயி

சரணம் சரணம் தாயே சரணம்
வரணும் வரணும் அருளே தரணும்

சூலமேந்தி ஆடுகின்ற மாரியம்மா
காலமெல்லாம் காவலாக வாடியம்மா

சடையாண்டி கோபிப்பான்
முருகனுக்கும் கோபம் வரும்
கணபதிக்கோ பிடிவாதம்
மாயவனோ பாராமுகம்
நாளெல்லாம் சோதனையோ
தாயுன்னை நோகவிடும்
வாடியம்மா வாவா உந்தன்
நிம்மதிக்கே பூலோகம்

சரணம் சரணம் தாயே சரணம்
வரணும் வரணும் அருளே தரணும்

பரமசிவன் மேனியிலே
நாகரூபம் ஆனவளே
வேற்காட்டுப் புற்றினிலே
படமெடுத்து நின்றவளே
குழந்தையம்மா நான் இங்கே
பாலூட்ட வருகின்றேன்
மகுடி ஒலி போலே எந்தன்
உள்மூச்சை விடுகின்றேன்

சரணம் சரணம் தாயே சரணம்
வரணும் வரணும் அருளே தரணும்!

9 comments:

  1. அக்கா
    அருமையான பாட்டு!
    வேற்காடு-கொல்லூரு! தமிழ்நாடு-கர்நாடக உறவுப்பாலம் சூப்பர்! :)

    சரி
    படத்தில் மூகாம்பிகை அம்மன் படத்தில் இரு புறமும் உள்ள அம்மன்கள் யார்? கீழே இருக்கும் அம்மன் பெயர் என்ன?
    (நம்மூர் மாரியம்மன் கோயில்களில் அம்மன் தலைரூபம் கீழே இருக்கும்! கர்நாடகத்திலுமா?)

    ReplyDelete
  2. வருக வருக, கண்ணா. யாரையும் காணோமேன்னு நெனச்சேன். முதல் தரம் கேட்கும் போதே ரொம்ப பிடிச்சுப் போய் உடனே மனனம் செய்த பாடல். ஆனா படத்தை பத்தி ஒண்ணும் தெரியாது; கொல்லூர் மூகாம்பிகைன்னு தேடி spbdevo.blogspot.com -ல இருந்து சுட்டேன். நீங்க கேட்டதெல்லாம் கண்டு பிடிக்க முடிஞ்சா, திரும்ப வந்து சொல்றேன் :)

    ReplyDelete
  3. தேடின வரைக்கும் தெரியல. கர்நாடகாக்காரங்க வந்து ஏதாச்சும் சொல்றாங்களான்னு பார்ப்போம்...

    ReplyDelete
  4. பாடல் நல்லாயிருக்கு...கேட்க தந்தமைக்கு நன்றிங்க.

    ReplyDelete
  5. மூகாம்பிகைக்குக்கீழே சிவசக்தி ஐக்கியம் (ஸ்வர்ண???)ரேகையுடன் கூடிய லிங்க சொரூபமாய் இருக்கும்னு பார்த்த நினைவு. ம்ம்ம்ம்???/ 2 வருஷத்துக்கு மேல் ஆகுதா?? கொஞ்சம் நினைப்பில்லை, எதுக்கும் என்னோட பதிவுகளில் இருக்கா பார்க்கிறேன்.

    ReplyDelete
  6. நன்றி மௌலி.
    நன்றி கீதாம்மா.

    ReplyDelete
  7. அருமையா சுருக்கமா இருக்கு கவிநயா அக்கா. இரவிசங்கர் சொன்னது போல் வேற்காட்டையும் கொல்லூரையும் இணைத்துவிட்டார்கள் இந்தப் பாட்டில். அது மட்டுமா? மாங்காட்டில் மீனாட்சி, மதுரையிலே மகமாயி, காஞ்சியிலே கருமாரி, தில்லையிலே கோலவிழி, சமயபுர காமாட்சி, மயிலையிலே ச்ரிகாளி என்று மாற்றி மாற்றிச் சொல்லி எங்கும் இருப்பவள் அந்த அன்னையே என்று மிக அழகாகச் சொல்லிவிட்டார்கள். அருமை.

    கொல்லூரில் அன்னை முப்பெரும்தேவியரின் திருவுருவாக அமைந்திருக்கிறாள். அன்னை சிம்மவாகினியாக சிங்கத்தின் மேல் அமர்ந்திருக்கிறாள். சங்கு சக்ர தாரியாக நாராயணியாக அமர்ந்திருக்கிறாள். கொல்லூரில் மூகாம்பிகை என்னும் போது மகாலக்ஷ்மியின் அம்சம் கூடுதல் என்று சொல்வார்கள். இருபுறமும் இருப்பவர்கள் மற்ற இரு தேவியர்.

    தமிழகத்தைப் போல் கருமாரியின் தலை மட்டும் இருப்பது தென்னகத்தில் பல இடங்களில் காணலாம். ஆனால் இங்கே, கீதாம்மா சொன்னது போல், கீழே இருப்பது பொற்கீற்றுடன் (ஸ்வர்ண ரேகை) கூடியிருக்கும் சிவசக்தி ஐக்கிய உருவான சுயம்புவே. அந்த சுயம்பு லிங்கத்திற்கு அன்னையின் திருமுகத்தைக் கவசமாக அணிவித்திருக்கிறார்கள். 'ஜனனி ஜனனி' பாடலில் அந்த சுயம்பு லிங்கத்திற்கு ஆதிசங்கரர் பூசை செய்வதைப் பார்க்கலாம்.

    ReplyDelete
  8. //மாற்றி மாற்றிச் சொல்லி எங்கும் இருப்பவள் அந்த அன்னையே என்று மிக அழகாகச் சொல்லிவிட்டார்கள். //

    உண்மைதான் குமரா. எனக்கு பிடித்த பகுதியையே எடுத்து காட்டி விட்டீர்கள் :) கொல்லூர் அன்னையை பற்றி விவரமாக எடுத்துக் கூறியமைக்கு நன்றி.

    ReplyDelete
  9. எனக்கே எனாக்கா /??( அம்மையே... புல் ஆனாலும் இந்த வலை பூவினால் மகிழம்பூ ஆகி விடுவேன் ..சித்ரா .//

    ReplyDelete