அனைவருக்கும் மனம் கனிந்த நவராத்திரி நல்வாழ்த்துகள்!
துர்க்கை அம்மன் மீது சுசீலாம்மா பாடிய இந்த பாடலை அறியாதவர்கள் இருப்பது அரிது. அப்படி இருந்த போதிலும், எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல் என்பதில் மாற்றுக் கருத்து இல்லைதானே?
ஒலி வடிவம் இங்கே...
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்(ஜெய)
துர்க்கை அம்மனை துதித்தால் என்றும்
துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயும் அவளை
தரிசனம் கண்டால் போதும்
கர்ம வினைகளும் ஓடும்
சர்வ மங்களம் கூடும்(ஜெய )
பொற் கரங்கள் பதினெட்டும்
நம்மை சுற்றி வரும் பகை விரட்டும்
நெற்றியிலே குங்கும பொட்டும்
வெற்றி பாதையை காட்டும்
ஆயிரம் கரங்கள் உடையவளே
ஆதிசக்தி அவள் பெரியவளே
ஆயிரம் நாமங்கள் கொண்டவளே
தாய்போல் நம்மை காப்பவளே (ஜெய)
சங்கு சக்கரம் வில்லும் அம்பும்
மின்னும் வாளும் வேலுடன் சூலமும்
தங்கக் கைகளில் ஏந்தி நிற்பாள் அம்மாதா...
சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள்
திங்களை முடி மேல் சூடி நின்றாள்
மங்கள வாழ்வும் தந்திடுவாள்
மங்கையர்க்கரசியும் அவளே
அங்கயற்கண்ணியும் அவளே (ஜெய..)
***
அன்னையின் திருவடிகள் சரணம் சரணம்!
படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/indianimages/832115886/in/set-72157600860832813/
சுசீலாம்மாவின் அருமையான பாட்டோடு முதல் கச்சேரி துவக்கமா?
ReplyDeleteஅனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்!
உங்களுக்கும் என் நவராத்திரி நல்வாழ்த்துக்கள்! ஒவ்வொரு வெள்ளியும் துர்க்கை அம்மனை ராகுகாலத்தில் துதிக்கையில் தவறாமல் நான் பாடும் பாடல். சுசிலாம்மா மாதிரி குரல் இருக்குமா என்று மட்டும் கேட்டு விடாதீர்கள்:))!
ReplyDeleteகாலைப்பதிவு அம்பிகையை நினைவுபடுத்தியது.பதிவுக்கும் பாடல் நினைவூட்டலுக்கும் நன்றி
ReplyDeleteநல்ல பாடல்...தந்தமைக்கு நன்றிக்கா.
ReplyDeleteவருக கண்ணா. நவராத்ரி வாழ்த்துகள் உங்களுக்கும். இந்தியா எப்படி இருக்கு? :)
ReplyDeleteஆஹா. மிக்க மகிழ்ச்சி ராமலக்ஷ்மி :) பாடி அனுப்பி வைங்க, கேட்டு சொல்றேன் :)
ReplyDeleteவாங்க நிர்ஷன். அம்பிகையை நினைச்சுக்கிட்டீங்கள்ல? அதுதானே வேணும் :) நன்றி.
ReplyDeleteவாங்க மௌலி. நன்றி :)
ReplyDeleteஇந்தப் பாடல் எங்க வீட்டுல அடிக்கடி பாடுவாங்க. தீராத விளையாட்டுப் பிள்ளையும் ஜெய ஜெய தேவியும் தான் நல்லா தெரியும். :-)
ReplyDeleteநல்லது குமரா :) மிக்க நன்றி.
ReplyDeleteமகிஷாசுர மர்தினி மங்களம் அருளட்டும்!
ReplyDeleteஆம், அருளட்டும். நன்றி ஜீவா!
ReplyDelete//சங்கு சக்கரம் வில்லும் அம்பும்
ReplyDeleteமின்னும் வாளும் வேலுடன் சூலமும்
தங்கக் கைகளில் ஏந்தி நிற்பாள் அம்மாதா...
சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள்
திங்களை முடி மேல் சூடி நின்றாள்
மங்கள வாழ்வும் தந்திடுவாள்
மங்கையர்க்கரசியும் அவளே
அங்கயற்கண்ணியும் அவளே //
துர்க்கா தேவி, அங்கயற்கண்ணி அனைத்து அன்பர்களுக்கும் எல்லா வளங்களையும், நலங்களையும் அருள இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்
வருக கைலாஷி. மிக்க நன்றி. உங்களுக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள்.
ReplyDeleteநவ ராத்திரி சுண்டல் போல் சூட சூட வந்த பதிவுகள் இசைத்து சுவைத்தோம் ..சித்ரம் //
ReplyDelete//நவ ராத்திரி சுண்டல் போல் சூட சூட வந்த பதிவுகள் இசைத்து சுவைத்தோம் ..சித்ரம் //
ReplyDeleteமிக்க மகிழ்ச்சியும் நன்றியும், சித்ரம்.