Tuesday, February 10, 2009

செந்தாமரையாய் மலர்ந்திடுவாய்!





ஆறைப் போல ஓடுதம்மா - மனம்
திசைகள் எல்லாம் அலையுதம்மா
கடலாம் உன்னைச் சேர மறந்து
பாதை தவறிப் போகுதம்மா

ஆற்றின் பாதை வகுத்திடுவாய் - அதன்
அறிவை உன்மேல் திருப்பிடுவாய்
போற்றி உன்னைப் பணிகின்றேன் - என்னை
ஏற்று அபயம் அளித்திடுவாய்

காற்றாய் என்னில் கலந்திடுவாய் - நெஞ்சில்
கனலாய் நின்று கனன்றிடுவாய்
ஊற்றாம் உந்தன் கருணையில் ஒருதுளி
என்மேல் தெறித்திடச் செய்திடுவாய்

நாற்றாய் உன்னை நட்டு விட்டேன் - நீ
கதிராய் வளர்ந்து நலம் தருவாய்
சேறாய்க் குழம்பிய எந்தன் மனதில்
செந்தாமரையாய் மலர்ந்திடுவாய்!

--கவிநயா

10 comments:

  1. மிக அருமையாக இருக்கிறது...சூரி சார் வந்து பாடிக் கொடுப்பார் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. வாங்க மௌலி. மிக்க நன்றி.

    ReplyDelete
  3. கிழவன் தேஷ் ராகத்தில் பாட முயற்சிக்கிற காட்சியை
    நீங்கள் பார்க்கவேண்டிய இடம்
    http://ceebrospark.blogspot.com

    சுப்பு ரத்தினம்

    ReplyDelete
  4. நல்லதொரு வேண்டுதல் அக்கா.

    ReplyDelete
  5. ஆகா, அருமையா இருக்கு தாத்தா. ராகம் வெகு பொருத்தம். நானும் கத்துக்கணும் :) மிக்க நன்றி.

    ReplyDelete
  6. வாங்க குமரா. மிக்க நன்றி.

    ReplyDelete
  7. A refined picassa upload was available here. Please come and see your song in the backdrop of lotuses.
    http://sachboloyaar.blogspot.comm

    ReplyDelete
  8. தாமரைகள் வெகு அழகு, நீங்களும் அனுபவிச்சு பாடியிருக்கீங்க :) மிக்க நன்றி தாத்தா.

    ReplyDelete
  9. //சேறாய்க் குழம்பிய எந்தன் மனதில்
    செந்தாமரையாய் மலர்ந்திடுவாய்//

    சேற்றில் செந்தாமரை என்பதை எம்புட்டு எளிமையாச் சொல்லிட்டீங்க-க்கா!

    சரி, சூரி சார் கூட நீங்க ஒரு நிரந்தர கால்ஷீட் போட்டுக்கலாம்!
    * பாடல்கள் = கவிநயா
    * இசை, திரையிசை, பின்னணி = சூரி சார்
    * வெளியீடு = கவி ஆடியோ வீடியோ விஷன்! :)))

    ReplyDelete
  10. //சேற்றில் செந்தாமரை என்பதை எம்புட்டு எளிமையாச் சொல்லிட்டீங்க-க்கா!//

    மனசு அப்படி இருக்கு :) ரசனைக்கு மிக்க நன்றி கண்ணா.

    //சரி, சூரி சார் கூட நீங்க ஒரு நிரந்தர கால்ஷீட் போட்டுக்கலாம்!//

    அவர்தான் எல்லாருக்குமேதானே பாடித் தர்றாரு. எல்லார்கூடயுமே நிரந்தர கால்ஷீட்தான் :)

    ReplyDelete