Monday, March 2, 2009

மீட்பது உந்தன் பொறுப்பு!



நீரில் விழுந்த தீக்குச்சி போல
பாவத்தில் என்மனம் விழுந்ததம்மா
நீரை விட்டு நின்னைப் பற்ற
நித்தம் நித்தம் முயலுதம்மா

கண்மணி உந்தன் அருமை தெரிந்தும்
என்மனம் ஏனோ அலைகிறதே
ஒளியின் தேவை நன்கறிந்திருந்தும்
இருளில் மூழ்கிக் கிடக்கிறதே

மாயையின் சுழலில் மரக்கலம்போல்நான்
மறுகுவ துனக்குத் தெரியலையோ? - புதை
குழியில் உன்பிள்ளை புதையும் முன்னே
மீட்பது உந்தன் பொறுப்பில்லையோ?

கண்கள் திறப்பாய் கருணை அளிப்பாய்
கரையேற்ற உடன் வந்திடுவாய்
மௌனம் துறப்பாய் ம(க்)களைப் பார்ப்பாய்
மயக்கம் தெளிவிக்க வந்திடுவாய்

--கவிநயா

("மகளை"ங்கிறதை "மக்களை"ன்னு மாத்திட்டேம்ப்பா! )

படத்துக்கு நன்றி: http://www.servekrishna.net/images/static/kurma/srilalitadevi.jpg

5 comments:

  1. மகள் என்று சொல்லாமல் எல்லோரும் பாடும் படி பிள்ளை என்று சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டே படித்து வந்தேன் அக்கா. அந்த எண்ணத்திற்கு ஏற்ப மகள் என்று எழுதியிருந்ததை மக்கள் என்று மாற்றியதற்கு நன்றி. :-)

    ReplyDelete
  2. //"மகளை"ங்கிறதை "மக்களை"ன்னு மாத்திட்டேம்ப்பா!//

    மகளைப் பெற்ற மகராசி என்பது நல்லா இருந்தாலும்
    மக்களைப் பெற்ற மகராசி-ன்னு சொல்லும் போது இன்னும் சூப்பர்-க்கா! :)

    ReplyDelete
  3. நன்றி தம்பீஸ்!

    ReplyDelete
  4. செய்யுள் வடிவ பாடல் படிப்பது போல் இருக்கிறது...

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷீ-நிசி.

    ReplyDelete