[1&2]

இப்போது அடுத்த மூன்று நாயகியரைத் தரிசிக்கலாம். பாடலைக் கவனித்தால், அந்த அன்னையின் அம்சங்கள் அதில் சொல்லப்பட்டிருப்பதைக் காணலாம்.
3.சந்த்ரகண்டா மாதா:

கொடுமைகள் புரிந்த அரக்கரைவென்றிட அமரர்கள் துதிக்க மகிழ்ந்தவளே
மாயையின் ஆணையால் மாதுயில் கொண்ட மாதவனை அன்று எழுப்பியவளே
மதுகை டபவதம் செய்திடவெண்ணி மஹா மாயையாய்த் திகழ்ந்தவளே
மன்னுயிர் போற்றிட விண்ணவர் வாழ்த்திட வெற்றியைக் கொடுத்திட்ட துர்க்கையளே!
மணிபோல் விளங்கும் சந்திரவடிவை நுதலில்கொண்ட சந்திரகண்டாஅன்னையளே
வில்லும் அம்பும் சூலமும் வாளும் கதையும் ஐங்கரம்கொண்ட தசக்கரளே
ஜெபமாலையுடன் தாமரை கமண்டலம் முக்கரம்கொண்டு அபயமும் அருளும் முக்கண்ணளே
நவநாயகியரில் மூன்றாம்நாளின்று சந்திரகண்டாமாதா தாள் பணிந்தேன்! [3]
4. கூஷ்மாண்டா தேவி:

காரிருள்சூழ்ந்த அண்டத்துள்ளிருந்து பேரருள் கொண்ட திருமகளே
அண்டத்தைப் பிளந்து பிண்டத்தை அளித்து உலகினைப் படைத்திட்டப் பரம்பொருளே
பொன்னிறமேனியில் துலங்கிடும் முகவருள் கொண்டெனைக் காக்கும் தூயவளே
அண்டசராசரம் அனைத்துக்கும்காரணி ஆகியகோளமாம் துர்க்கையளே!
கூஷ்மாண்டா எனும் பெயரினைக் கொண்டு சிம்மத்தின் மீது அமர்பவளே
வில்லும் அம்பும் கதையும் சக்ரமும் நான்குகைகளினில் கொண்டவளே
கமலமும் மாலையும் கமண்டலமும்கொண்டு அமிர்தகலசம் கொள்ளும் அஷ்டபுஜளே
நவநாயகியரில் நான்காம்நாளின்று கூஷ்மாண்டாவின் தாள் பணிந்தேன்! [4]
5. ஸ்கந்த மாதா:

பக்திசெய்தேவர் துயர்தீர்த்திடவே பரமனைவேண்டிடச் செய்தவளே
சிவனின் தீப்பொறி ஆறையும் ஆற்றினில் ஒன்றாய்ச் சேர்த்திட்ட தாயவளே
அன்புடன் அணைத்து அறுமுகனையொரு முருகனாய்க் கொண்ட உமையவளே
வீணரை வென்றிட சேயினைப்பணித்து வேலினைத்தந்திட்ட துர்க்கையளே!
ஸ்கந்தமாதாவெனச் சிம்மத்திலமர்ந்து குமரனைமடியினில் கொண்டவளே
மேல்வலக்கையினில் குமரனைக் கொண்டு மேலிடக்கையினால் அருள்பவளே
மற்றிருகைகளில் தாமலைமலரினைத் தாங்கியே அருள்தரும் சதுர்புஜளே
நவநாயகியரில் ஐந்தாம்நாளின்று ஸ்கந்தமாதாவின் தாள் பணிந்தேன்! [5] *************************
[நவநாயகியர் உலா இன்னும் வரும்!]
ஜெய்தேவி துர்கா! ஜெய்தேவி துர்கா! ஜெய்தேவி துர்கா!
உங்கள் பதிவு அருமை
ReplyDelete//உங்கள் பதிவு அருமை//
ReplyDeleteநன்றி ஐயா!!
ஸ்கந்த மாதா (கந்தன் அம்மா) படம் சூப்பர்! ரொம்ப அழகா இருக்கு SK!
ReplyDelete//ஸ்கந்த மாதா (கந்தன் அம்மா) படம் சூப்பர்! ரொம்ப அழகா இருக்கு SK!//
ReplyDeleteஅப்படீன்னா.....!!!!!
//ஸ்கந்த மாதா (கந்தன் அம்மா) படம் சூப்பர்! ரொம்ப அழகா இருக்கு SK!//
ReplyDeleteஅதேதான் நானும் நினைச்சேன்.. பாடல்களும் அழகுதான் :)
நன்றி கவிநயா!
ReplyDeleteவார்த்தைகள் எளிமையாக, இனிமையாக வந்திருக்கிறது. அருமை சார்.
ReplyDelete//வார்த்தைகள் எளிமையாக, இனிமையாக வந்திருக்கிறது. அருமை சார்.//
ReplyDeleteமிக்க நன்றி ஐயா!